பாமரன்
இது ஒரு அழகிய கூத்து
அழுகிய நாத்து.....
கறை படியாத மேகங்கள்
கருமை நிறமில்லா காகங்கள்.....
அணிந்தவன் நிர்வாகி
அணிவித்தவன் நிர்வாணி .....
பங்கு போட்டுத்தான் பந்தி
பாமரன் நிற்கும் இடம் சந்தி.....
தேடி சொன்னால் பல கோடி
தெருவில் கண்டது சில கோடி.......
மொத்தத்தில் ஒரு மாயத்தோட்டம்
ஆயிரம் மான்கள் கூட்டம்....
உண்மையை சொல்பவன்
தீவிரவாதி....
உரைத்ததை சொல்பவன்
தேசத்துரோகி......
பாமரன் ஞானியாகிறான்
பாரத தேசத்திலே.....
தகுதி:
18 வயது
வாக்காளர் அடையாள அட்டை..
நானும்
இன்று பாமரன்
நாளை ஞானி.......
தேவை பட்டால்
என் மீதும் பாயும்..
தே. பா.ச.
- ரஞ்சித்குமார்
No comments:
Post a Comment