அவளுக்காக...
கோபம் வந்தால்
கசக்கி தூக்கி எறிகிறாய்,
குப்பைத் தொட்டியில்
குப்பைத் தொட்டியில்
காகிதமாய் கண்ணீர்
சிந்திக்கொண்டே...,
பாசம் வந்தால்
குப்பைத் தொட்டியின்
அருகே குடித்தனம்
இருக்கிறாய்,
குழந்தையாக ......
கோபத்தில் முகம் சிவந்தால்
என் மனைவியாகிறாய் ,
ஆசையில் மனம் மகிழ்ந்தால்
என் மழலையாகிறாய்..
உன் கண்ணீர் பட்டால்
நான் நனைந்து போகிறேன்
இல்லை இல்லை
நான் அணைந்து போகிறேன்..
மாறிவிட்டேன் என்கிறாய்
ஆமாம்
உன் பித்தனாக இருந்தேன்
பக்தனாக மாறிவிட்டேன்..
விண்ணின் ஒரு துளி நீர்
ஊற்றெடுக்காது ,
உன் விழியின் ஒரு துளி
பாறை என்னுள்ளே
ஈரம் கசிய செய்கிறது..
ஒருவர் அன்புக்கு மற்றவர்
ஏங்கி அழுகின்றனர் காதலர்கள்,
ஆனால்
அவர்களின் காதலோ???
இன்பத்தில் களியாட்டம்
ஆடிக் கொண்டிருக்கிறது..
தனக்கு அழிவில்லை என்பதை எண்ணி...
-கி.ரஞ்சித்குமார்.
Nice Lines
ReplyDeleteMAARIVITEN YENGIRAI
ReplyDeleteAAMAM
PITHANAGA IRUNTHEN
UN BAKTHANAGA MAARIVITEN...........
VERY NICE LINES DA
உன்னுடைய அவளுக்காக,
ReplyDeleteநீ புனைந்த காதல் மடல்,
அருமை...