விண்ணைத் தாண்டி வருவாயா....?
அது ஒரு இரவு.....
நான் அவளை பார்க்கின்றேன்;
அவளும் என்னை பார்க்கின்றாள்;
அவளையே உற்றுப் பார்க்கிறேன் வெட்கத்தில் வெண்மேகத்தில் முகம் புதைத்தாள் என் உயிர் சிதைத்தாள்........
அவள் தேகம் எனக்கு புலப்படவில்லை பால் ஓடையாம் பளிங்கு முகம் மட்டுமே பார்வைக்கு அனுமதித்தாள்.....
எங்களுக்குள் மௌனம் மட்டுமே மொழியாய் இருந்த்தது;
பாதைகள் மறக்கும் அடர் காடுகளில் நடந்தாலும் என் பாதச் சுவடில் பின் தொடர்ந்தாள்..
கால்கள் திசை அறியாது நடந்தன,
அவள் பார்வை என்னை விடவில்லை ஓடி ஓடைக் கரையில் ஒளிந்தேன் சல சல என சிதைந்து கொண்டே சிரித்தாள் நீரில் ..........
கண்களை மூடினால் இமைகளில் இருப்பிடம் கொண்டு விழிதனை விட மறுக்கிறாள், கோபத்தில் செல்லமாய் முறைத்தேன் வேகமாய் மூடினாள் முகத்தை மேகத்துணியால்.......
போதும்.... போதும்....
மூச்சுவிடத் துடிக்கிறேன் மூர்ச்சையாகி விடுவேனோ...?
நிறுத்தி விடு உன் விழியின் விளையாட்டுக்களை,
அன்பாய் அழைக்கிறேன் அருகில் வருவாயா..?
இல்லை எனக்கு நிம்மதியே இறங்கி வருவாய் வெண்மதியே....
என்னைத் தூண்டி விட்டாயே..! நிலவே நீ விண்ணை தாண்டி வருவாயே...!
-கி. ரஞ்சித் குமார்

Aim for the moon. If you miss, you may hit a (cine)star.
ReplyDelete"The moon is nothing but a Biggest Drug divinely subsidized to provoke the world into a rising birth-rate" - Christopher Fry.
ReplyDeleteNo Wonder, How you get addicted to it.
இயற்கையை ரசிக்க இயல்பான தமிழ் வரிகள்...
ReplyDelete'விண்ணைத் தாண்டி வருவாயா' என்ன?
விண்ணைத் தாண்டி வரத்தான் வேண்டும்
உன் கவிதையை ரசிக்க...!!!