மனிதன் மற்றவர்களுக்கு பட்டம் கொடுப்பதற்காக அதிகம் சிந்திப்பதோ, மெனக்கெடுவதோ இல்லை. பட்டத்திற்கும் சம்மந்தப்பட்டவருக்கும் பொருத்தம் கூட பார்காமல், கொஞ்சம் எதுகை மோனையுடனோ அல்லது எதாவது ஒரு பெரிய பொருளுடன் ஒப்பிட்டோ, காரியத்தை எளிமையாக முடித்துவிடுவார்கள். ஆனால் மனிதன் தெரிந்தோ தெரியாமலோ அளித்த பட்டங்களில் மிகமிக பொருத்தம், சிங்கத்திற்கு மட்டுமே!. 'காட்டு ராஜா !'’
மனிதனைப் பொறுத்தவரை மிருகங்களின் அடிப்படைத் தேவை உணவு, புணர்ச்சி மற்றும் தற்காப்புக்காக தாக்குவது. ஆனால் இந்த மூன்று காரணங்களையும் தாண்டிய அவற்றின் சிந்தனையும் செயல்பாடும் நம்மை கொஞ்சம் வியப்படையத்தான் வைக்கிறது.
சிங்கத்தை பொறுத்தவரை 'ஆதிக்கம்' மிக முக்கியமாக கருதப்படும். சராசரியாக ஒரு சிங்க கூட்டத்தில் (Pride!) 1 முதல் 4 வரை பெரிய ஆண் சிங்கங்களும் (ஆண் சிங்கத்திற்கு ஆங்கிலத்தில் 'TOM' என்றும் ஒரு பெயர் உண்டு), 6 முதல்10 வரை பெரிய பெண்சிங்ககளுடன் இருக்கும். இதில், ஆண் சிங்கங்களில் ஆல்ஃபா (Alpha) , பீட்டா(Beta) என்றுதரவரிசையும் உண்டு. பெரும்பாலும் ஒரே ஒரு ஆல்ஃபா சிங்கம் தான் ஒரு கூட்டத்தில் வசிக்கும் (சர்வாதிகாரம்!).ஆல்ஃபா சிங்கத்திற்கான தகுதி - பலம், எடை, வேகம், துணிவு, பயமுறுத்தும் அணுகுமுறை மற்றும் எதிர்பவர்களை ஆரம்பத்திலேயே அடக்கிவைப்பது. மேலும் பிடறியின் அளவும், கருமையும் கூட கூட்டத்தின் தலைவனை முடிவு செய்யும். [ பூனை குடும்பத்தில் (cat family) கூட்டமாக வாழ்வது சிங்கம் மட்டுமே!]
ஆனால்! ஒரு கூட்டத்தின் தலைவனாக இருப்பது அவ்வளவு சுலபம் அல்ல. என்னதான் ஒரு நாளுக்கு 20 மணி நேர ஓய்வு என்றாலும், தன்னுடைய எல்லையை பாதுகாப்பதில் ஆண்தான் முழு பொறுப்பு வகிக்கிறது. ஆண் சிங்கம் தன் எல்லையை குறிக்க மரங்களிலும், செடிப்புதர்களிலும் சிறுநீர் கழிக்கும். இந்த வாசனை மற்ற சிங்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாக விளங்குகிறது. மேலும் ஒரு சிங்கத்தின் கர்ஜனை சுமார் 8கி.மி வரை ஒலிக்கும். இதுவும் கூட வேற்று கூட்டத்தை சேர்ந்த சிங்கங்கள் தன் எல்லைக்குள் வராமல் தடுக்கவே! சராசரியாக ஒரு கூட்டத்தின் தலைவன் தன் நாளின் தொடக்கத்திலும் முடிவிலும் கர்ஜிப்பது வழக்கம்.
வேட்டை!.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. இது சிங்கத்தின் உண்மையான வாழ்கை நெறி. ஒரு இரையை குறிவைத்து, அதனை ஒட்டுமொத்த கூட்டமும் சுற்றி வலைத்து, இரையின் தப்பிக்கும் வழிகளை மறைத்து, அதன்பின்னரே தாக்கும்.
சாதாரனமாக, இரவில் மிகவும் குளிர்ந்த பொழுதுகளில்தான் சிங்கங்கள் வேட்டைக்குச் செல்லும். இரையின் அளவு ஒட்டுமொத்த கூட்டத்திற்கும் போதுமானதாக இருந்தால், எல்லோருக்கும் ஒரே பந்திதான்! ஆனால், அளவு குறைவான நேரத்தில் தலைவனுக்கே முன்னுரிமை. காரணம் - கூட்டத்தை காக்கும் தலைவன் பலத்துடன் இருப்பது அவசியம் என்று மொத்த கூட்டமும் உணரும். (ஒரு ஆண் சிங்கம் சராசரியாக ஒரு வேளைக்கு 34கி இறைச்சி உண்ணும்)
எல்லோரும் நம்புவது போல் பெண் சிங்கம்தான் வேட்டைக்கு செல்லும். குட்டிகளுக்கும் பரிமாறும். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகளின் படி 50% முதல் 60% வரை, வேட்டையில் ஆண்களும் பங்குகொள்கிறது. குறிப்பாக இரையின் அளவு மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஆண் சிங்கமே வேட்டையை முன் நின்று நடத்தும். (சிங்கங்கள் ஒன்று கூடி பெரும் ஆப்பிரிக்க யானையையும் கொன்றுவிடும்)
புணர்ச்சியிலும் சிங்கம் சிங்கம்தான்!. ஒரு பெண் சிங்கம் புணர்ச்சி காலத்தில், ஒரே நாளில் ஐம்பதுமுறைக்கும் மேல்ஆண் சிங்கங்களுடன் புணரும். இந்த காலம் மூன்று அல்லது நான்கு நாள் நீடிக்கும். பின்பு மூன்றரை மாதத்தில்குட்டிகள்.
குட்டிகள் இரண்டு ஆண்டு வரை பெற்றோரின் பராமரிப்பிலேயே வளரும். ஆண் சிங்கங்கக் குட்டிகள், மூன்று வயதை நெருங்கும் போது, பிடறிகள் வளர்ந்து கொஞ்சம் இளமை தென்பட்டால், அது கூட்டத்தின் தலைவனால் கூட்டத்தைவிட்டு விரட்டப்படும்! (ஆதிக்கப் பிரச்சனை தான் காரணம். மேலும் தன் மனைவிமார்களை பாதுகாத்துக்கொள்வதற்காக). இப்போது அந்த குட்டிகள் - நாடோடிகள்!
நாட்கள் கழியக் கழிய இவை தன் திறமைகளை வளர்த்துக்கொண்டு (Survival of the Fittest!), மற்ற நாடோடிச் சிங்கங்களை கூட்டு சேர்த்துக்கொண்டு வேறு ஒரு கூட்டத்தை தாக்கி, அதன் தலைவனை விரட்டிவிட்டு, அந்த கூட்டத்தின் பெண்களை தன் வசம் ஆக்கிக்கொள்ளும். இப்போது இது மீண்டும் ராஜா!.
அந்த புதிய கூட்டத்தின் பெண் சிங்கங்கள் உடனடியாக சேர்க்கைக்கு சம்மதிக்காது. இந்த புதிய தலைவன் தன் திறமைகளையும், த்னனால் இந்த கூட்டத்தை கட்டிகாப்பாத்த முடியம் என்றும் நிருபித்தாக வேண்டும். பின்புதான் பெண் சிங்கம் ப்ச்சை கொடி காட்டும்!. இதற்கு குறைந்தது ஆறு வாரங்கள் ஒரு ஆண் சிங்கத்திற்கு தேவை படும். அதற்கு மேலும் பெண் மறுத்தால், அந்த பெண் சிங்கத்தின் குட்டிகளை புதிய தலைவன் கொன்றுவிடுவான். அப்போதுதான், அந்த பெண் சிங்கம் மீண்டும் தாய்மை அடைய தலைவனிடம் நெருங்கும். (ராஜதந்திரம்!).
சிங்கம் முதல், மற்ற அத்தனை உயர்மட்ட உயிரினங்களுக்கும் தன் மனைவிமார்களை காத்துக்கொள்ளுதல் என்பது பெரும் சவால் தான்!. அப்படி காப்பாற்றிவிட்டால், மீண்டும் ஒரு புதிய கூட்டம். அதில் அதிக திறமை கொண்டது 'ஆல்ஃபா' - தலைவன். ராஜா!
சிங்கத்தை பொறுத்தவரை அதன் எதிரிகள், மற்ற சிங்கங்களும் ஆயுதம் தாங்கிய மனிதர்கள் மட்டுமே. (சிங்கம்தான் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஊனுண்ணி!)
மனிதர்களை சிங்கங்கள் அதிகம் கொன்றது இல்லை. அப்படியே சில நேரம் தன் வழியில் மனிதன் குறுகிட்டலோ அது மனிதனிடம் கடைபிடிப்பது ஒரு பிரத்யேகமான அணுகுமுறை. அதிகம் ஆற்பாட்டம் இல்லாமல் மனிதனுக்கு அதன் ஒற்றைக் காலை பயன்படுத்தி ஒரே ஒரு அறை. அதுதான் மனிதனுக்கு தரப்பட்ட '‘அனஸ்தீசியா'. மயக்கம் உடனே வந்துவிடும். பின் சத்தமில்லாமல் எளிமையாக ஒரு 'ஆப்பரேஸன்'. ('operation success but patient died' கதைதான்!).
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மொத்த சிங்கத்தின் எண்ணிக்கை 450,000. இப்போதோ வெறும் 20,000. அதிலும் ஆண் சிங்கத்தின் எண்ணிக்கை 2500 மட்டுமே.
உலகில் சிங்கங்கள் வசிப்பது ஆப்பிரிக்கா மட்டும் இந்தியாவில் மட்டுமே!
இப்பொழுதும் நீங்கள் யாராவது உங்கள் வீரத்தை பறைசாற்ற சிங்கத்தை கொல்லும் ஆசை இருந்தால் 'world conservation union' பற்றி தெரிந்து கொண்டு பின் செயல்படவும்.
இறுதியாக - புலித்தந்தைக்கும் சிங்கத்தாய்க்கும் பிறந்த குட்டி - டிக்லான் (TIGLON)
TIGLON
தந்தை சிங்கம் + தாய் புலி = ?
லைகர் (Liger)
பரவாயில்லை என்ன பத்தி மனுசங்களுக்கு இவ்ளோ தெரிஞ்சிருக்கு..........??????
ReplyDeleterealy nice and imortant news for humans about life
'Well begun is half done' as per the words a great start for 'Do u know' which features about the real king...
ReplyDeleteLot of unknown info and statistics combined with aptly suited pictures...
Genuine comment : HATS OFF!!!
really enjoyed it...especially for it had that "SJ Suriyah element" .... :)
ReplyDeleteTIglon, Liger Unmaya?
ReplyDeleteYes, They are for real! This animal hybrid, Liger is recognized by the Guinness Book of World Records as the largest living cat on Earth.(During the year 1935, four ligers from two litters were bred in the Zoological Gardens of Bloemfontein, South Africa.)
ReplyDeleteTiglons were more common than ligers during the late 19th and early 20th century