தாய் -அம்மா
சுபமங்கள மஹாலில் நாளைய முகூர்த்தத்திற்கான வேலைகளை ஒருபுறம் மும்முரமாக கவனித்துக் கொண்டிருந்தார் நவநீதன். அன்றைய தினம் மாலை நிகழவிருக்கும் நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் ஏறக்குறைய முடிந்துவிடும் தருவாயில் இருந்தது.
வரவேற்பு பந்தலில் சந்தனம் குழைத்து, இனிப்புகள் நிரப்பி, ரோஜா மலர்களை பரப்பி,பன்னீரை குவளையில் நிரப்பி இவற்றை முறையாக எடுத்துவைப்பது முதல்அடுப்பங்கரையில் கேசரியின் இனிப்பும், இட்லி சாம்பாரின் காரமும், ஐஸ்கிரிமின் ஜில்லென்ற தன்மையும் பதமாக உள்ளதா என பார்ப்பது வரை எல்லா காரியங்களையும் சுழன்று சுழன்று கவனித்தாள் தாய்யம்மா.
இடையிடையே மணமகள் அறையினுள் கவனத்தை செலுத்தி ஏதேனும் அழுகுரல் கேட்கிறதா என்பதை கண்டறிந்து, எந்த தொந்தரவும் இல்லாமல் குழந்தையின் சிரிப்பு சப்தம் கேட்டால் நிம்மதி பெருமூச்சுடன் தனக்கென உள்ள ஆயிரத்தி எட்டு வேலைகளில் முழ்கிடுவாள்.
திருமணம் நிகழவிருப்பது ரிடயர்டு தாசில்தார் நவநீதனின் மகள் கயல்விழிக்கு. அவளிடம் முழுஉரிமை தந்தையைவிட, தாயயம்மாவுக்கே அதிகம். தான் பெறவில்லை எனினும் இருபத்திமுன்று வருடம் வளர்த்தவள் ஆயிற்றே . அந்த வீட்டில் தாயம்மாள் வேலை செய்தால் என்றாலும் நவநீதானிடம் மிகுந்த மரியாதையும் கயலிடம் அளவற்ற பாசமும் கொண்டிருந்தாள். கயலும் தாயம்மாளை அம்மா என்றே அழைத்தாள்.
நல்ல நேரம் நெருங்கிக் கொண்டிருக்கையில் நவநீதன் கயல்விழியை அழைத்து வருமாறு கூற தாயம்மாள் அறையினுள் சென்று மணமகள் அலங்காரத்திலிருந்த கயல் தன் குழந்தை ஆனந்தியோடு விளையாடுவதை நோக்கினாள். தாயம்மாள், கயல் தன்னிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டவுடன் அவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டாள். கை பிடித்து மேடைக்கு அழைத்து வந்து நிச்சய தாம்பூலம் மாற்றுவதை கண்டு மனதார வாழ்த்தி மகிழ்ச்சியுற்றாள்.
இனி மற்றவைகளை நவநீதனிடம் விடுத்து அறைக்கு திரும்பி தன் குழந்தை உறங்குவதை உறுதி செய்தவள், களைப்பு மிகுதியால் தானும் ஒரு மூலையில் படுத்து கண் அயர்ந்தாள்.மண்டபத்தில் அரங்கேறிக்கொண்டிருந்த வாத்தியங்களின் இசையோ, திரளாக வாழ்த்த வந்திருந்த மக்களின் ஆரவாரமோ அவளது ஆழ்ந்த தூக்கத்தை கலைக்கவில்லை.
ஆனால் திடீரென்று அழத்தொடங்கிய தன் குழந்தையின் குரல், வெளியே நிலவிய களேபரத்துடன் ஒப்பிடும் போது மெல்லியது தான். அப்படியிருக்க அந்த சினுங்கல் எவ்வளவு விரைவாக உடுருவிச்சென்று அவளது தூங்கிக்கொண்டிருந்த மூளையை தட்டி எழுப்பியதோ தெரியவில்லை, நொடிப்பொழுதில் கண்விழித்து குழந்தையை வாரி அணைத்து சமாதானப்படுத்தினாள், " என்னம்மா, என்ன ஆச்சு என் அம்மாவுக்கு! என் ஆனந்தக் கண்ணம்மா!! என் தாயம்மா!!!" என்று.
!!!---!!!
No comments:
Post a Comment