கேட்டுச் சொல்லுங்கள்.!!
போர் நடக்கவிட்டுவிட்டு
நிவாரணம் தருவதை விட
போரை தடுக்க முடியாதா……….?
“பிளாஸ்டிக் வேண்டாம்” என
பிளாஸ்டிக் பலகையில்
விளம்பரம்……………?
அன்பே கடவுள்..என சொல்லும் எல்லா
மதங்களிலும் அது எங்கே உள்ளது..?
என கேட்டுச்சொல்லுங்கள்…..
குளத்தை மூடி கட்டப்பட்ட
உயர் கட்டிடத்தில்…..
மழைநீர் உயிர்நீர் வாசகப் பலகை…….?
“தமிழ் வாழ்க”
மின்னொளிப் பலகைக்கும்
மின் வெட்டு…..?
பல் விழுந்த்த கிழவி
ஆனாள்……மினுக்கும்
பொன்மேனிக் குமரியாக….
தேர்தல் நேரத்து சாலைகள்……
செவிடர்களுக்கும் கேட்கும்படி சத்தமாக கேட்போம்!
ReplyDeleteதோழி,
ReplyDeleteஉங்கள் கவிதை அருமை.
வீரம் தில்லை.
www.veram-thilay.blogspot.com
யோசிக்க வேண்டிய நிகழ்வுகள்...
ReplyDeleteயோசிக்க சரியான தருணமும் கூட...
ஒருவர் கேட்டால் மட்டும் போதாது...
ஒவ்வொருவரும் கேட்பபோம்...
விடை கிடைக்கும் வரை!