Showing posts with label Short Stories. Show all posts
Showing posts with label Short Stories. Show all posts

Sunday, June 16, 2013

அவள்... அவன்...

                                                    அவள்... அவன்...

சில்லென்ற தென்றலும், பனிக்கட்டியை  உருக்கி தெளித்தது போன்ற பிரமையை ஏற்படுத்திய நவம்பர் மாத மழைச்சாரலும், நடுஇரவு நிசப்தமும், அதனை கலைக்கும் விதமாக சற்றே அதிர்ந்து கொண்டிருந்த புதுப்பாடல் மெட்டுக்களையும் ரசித்தவாறு 'அவன் மனம் விரும்பும் அவளும்' அருகிலிருக்க, அரை மணிநேர பயணம் அரை விநாடியாக கரைந்தோடியது  அஷ்வினிற்கு.  நடுஇரவைத் தாண்டி அதிகாலையை எதிர்நோக்கிய ரம்மியமான சூழலை அவளும்  ரசித்தாள். இருந்தும் ரசனையை மீறிய எதிர்பார்ப்பு உள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்ததனால்  பெரிதாக எந்தவொரு தாக்கத்தையும் இந்த சூழல் அவளிடம் ஏற்படுத்தவில்லை. அஷ்வினிற்கு அவளின் அமைதி புதிதாக, புரியாத புதிராக இருந்தது.

ஏர்போர்ட்டினுள் நுழைந்ததும்  சட்டென்று நின்றது கார். தற்காலிகமாக நினைவளைகளுடனான  சண்டையை நிறுத்தி தன்னிலை உணரவைத்தது அஷ்வினுடைய அன்பான ஸ்பரிசம். சுற்றி பார்வையை செலுத்தியவள் தனக்காக காரின் கதவை அஷ்வின்  திறந்ததையறிந்து தட்டுத்தடுமாறி  கீழே இறங்கியதும்,  தானும் கீழிறங்கி புன்னகையுடன்  ஓரிரு வார்த்தைகள்  கூறி கையசைத்து அவள் உள்ளே போகும்வரை காத்திருந்து அனுப்பிவிட்டு, கைகடிகரத்தில் மணி 1:30 என பார்த்தவனுக்கு இன்னும் சரியாக ஒரு மணி நேரத்திற்குள் மற்றவர்களை அழைத்துக்கொண்டு வரவேண்டுமென்னும் ஞாபகம் வரவே பிரிய மனமில்லாமல் தன்னுடைய காரில் விரைந்தான் அஷ்வின் .

வெளி உலகின் இரவு சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டு ஒளி வெள்ளத்தால் பகலைப்போல காட்சியளித்த ஏர்போர்ட்டின் உட்பகுதி மிகுந்த பரபரப்போடு இயங்கிக்கொண்டிருந்தது. அந்த பரபரப்பை மிஞ்சும் குதூகலத்தோடு தேடல் படலத்தை மேற்கொண்ட அவளது பார்வை நிலைகொண்டது தொலைவில் பயணியர்  இருக்கையில் அமர்ந்திருந்தவனின் மீது. அவளின் மனதில் சட்டென்று  ஊடுருவிய நிகரில்லா மகிழ்ச்சியானது இதழ்களில் சிரிப்பாக வெளிப்பட்டது . மெதுவாக அவனருகில் சென்றவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள். கண்களை மூடி 'ஐ- பாட்' டில் இசையை ரசித்துக்கொண்டிருந்தவாறு அவளுக்காக காத்திருந்தவனின் உள்ளுணர்வு அவளது வருகையை அறிவுறித்தியதோ என்னவோ! நொடியில்  கண்களை திறந்தவன் நேராக அவளது விழிகளை நோக்கினான்.

அவள் - சாஹித்யா. அவன் - சித்தார்த்.

ஆச்சரியத்தில்  "ஹாய் சாஹி..." வார்த்தைகள் வெளிவருவதற்குள், குறும்பு புன்னகையுடன் அவனது கைகளை குலுக்கி, அவனுக்காக வாங்கி வந்திருந்த ஸ்வீட்(டை) சர்ப்ரைஸாக உள்ளங்கையில் திணித்து  "ஹாய் சித்தார்த்! எப்படி இருக்க? எப்ப வந்த? அம்மா அப்பா எப்படி இருக்காங்க? ஏதாவது சாப்பிடுறியா?  ஹவ் அபௌட் எ காஃபி?" பதிலுக்காக காத்திருக்காது கேள்விகளை அடுக்கியவளை போதும் போதும் என்று கையுயர்த்தி செய்கையால் நிறுத்தியவன்  "ஒரு ப்லசன்ட் ஷாக் ஆக்சுவலி!  ஐம் பைன்! மாம் அண்ட் டாட் ஆல்சோ பைன் அஸ் வெல்" மெதுவாக யோசித்து பதிலளித்தான் எனினும் அவளது விழிகளின் மீது உறைந்திருந்த தன் பார்வையை அகற்றவில்லை.

அவனது கண் சிமிட்டாத பார்வையின் அர்த்தம் புரியாமல், ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தி கேள்விகணை  தொடுத்தவளுக்கு "சாஹித்யா தேங்க்ஸ் பார் டெம்ப்டேஷன் சாக்லேட்! நீ இன்னும் மாறவே இல்ல! அதே மூச்சு விடாம பேச்சு, அதே பளீச் புன்னகை, அதோடு  நம்ம டீல் - எப்ப மீட் பண்ணாலும் அது டெம்ப்டேஷன் சாக்லேட்டோட தான் என்பதை நீ மறக்கல. பாரு நான் மறந்துட்டேன்" வருந்தியவனிற்கு டிரேட் மார்க் புன்னகையை உதிர்த்துவிட்டு  "சித்தார்த், நீ கூட தான் இன்னும் மாறவே இல்ல!" ஒரு சின்ன பாஸ் விட்டு தொடர்ந்தாள்  .

"அதே பெர்சனாளிட்டி, அதே நிதானமான இங்கிலிஷ் அக்சென்ட் பேச்சு, அதே ஹேர் ஸ்டைல், அதே மறதி அண்ட் அதே பார்மல் டிரஸ்ஸிங். ஆனா... இப்போ இன்டர்வியு அட்டென்ட் பண்ணபோகல, அட  பொண்ணு பாக்க போவதற்குகூட பிளான் எதுவும் இல்லையே! அப்படியிருக்க  டிராவலிங்லயும் இந்த ஷு சாக்ஸோட ஃ பார்மல் டிரஸ்ஸிங் கொஞ்சம் இல்ல சித்தார்த ரொம்பவே ஓவர் தெரியுமா? பரவாயில்லை, நீ இந்த அவுட்ஃ பிட்ல ரொம்ப இல்லைனாலும்  ஓரளவிற்கு ஹேன்ட்சம்மா  தெரியிரதால நான் உன்ன மன்னிச்சு விடுறேன்."  என்ற சாஹியின் கிண்டலான பதிலுக்கு இருவரும் தங்களை மறந்ததோடு மற்றவர்களையும் மறந்து சத்தமாக சிரித்தனர்.

 "அவ்ளோதானா? வேறெதுவும் இல்லையா?? என்ன பத்தின காம்ப்ளிமண்ட்ஸ் ஏதாவது???" என இந்த முறை அவளின் கேள்விகணை முடியாமல் தொக்கி நின்றதன் அர்த்தம் அவ்வளவு சீக்கிரத்தில் புரியவில்லை சித்தார்த்திற்கு. "வேறென்ன?" என்றவனுக்கு "அதுசரி. இப்படி இருந்தால் தானே நீ சித்தார்த்!" என்று மனதில் திட்டியதை கஷ்டப்பட்டு மறைத்து "சாஹித்யா..... புடவை உனக்கு ரொம்ப நல்லா இருக்கு! நீ அழகா இருக்க! இப்படி சின்னதா ஒரு பொய் கூட சொல்லத்தோனலையா" சட்டென்று முடித்தாள். "வாவ்! ஃ பர்ஸ்ட் டைம் ஐம் சீயிங் யூ இன் சாரீ. யூ லுக் ப்ரிட்டி கார்ஜியஸ் சாஹி!!! ஐம் டேம் சீரியஸ் நவ்!" என்றான் சித்து. அவனது கூற்று உண்மையா அல்லது சாஹி சொன்னது போல் சிறியதொரு பொய்யா? இது 100% நிஜமான உண்மையே! நிஜமும் உண்மையும் ரெண்டும் ஒண்ணுதானே என்கிறீர்களா?!? எது  எப்படியோ அதை சித்துவிடமிருந்து வெளிக்கொணர  படாதபாடு பட்ட சாஹித்யாவிற்கு அழுத்தமான அங்கீகாரம் தரவேண்டியே இப்படி.

 சித்து  "சாரீ கட்டும் போதுதான் பொண்ணுங்க பொண்ணுங்களாக தெரியுறாங்க" என்று அடிக்கடி சாஹியிடம் கூறுவான். சாஹிக்கு சாரீ அவ்வளவு கம்போர்டபுள் இல்லைனாலும் இன்று ஒருநாள் சிட்துவிற்காக ட்ரை பண்ணினாள். அதோட அவுட்கம்  ரொம்பவே பாசிட்டிவ்வாக இருந்ததில் மகிழ்ச்சி. உண்மையில் காம்ப்ளிமண்ட்ஸ் எதுவாயினும் போட்டு உடைகிற மாதிரி சொல்லி விடுவதே சித்து ஸ்டைல்.  இப்பவும் அப்படித்தான்! கண் இமைக்காமல் அவளின் விழிகளையே நோக்கி இருந்ததற்கு காரணம் இதுவே. ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தபோதும்  இதுதானென்று தெளிவாக புரிபடவில்லை. என்ன செய்வது கடைசியில் போட்டு வாங்க வேண்டியதாயிற்று.

 இவ்வாறு சகஜமாக  இருவரும் பேசிக்கொள்வதை பார்கையில் என்ன தோன்றுகிறது? சாஹி-சித்து ரொம்ப நாள் பழக்கமாக இருக்கும் என்று தானே? கரெக்ட்தான் ! பாயிண்ட்டுக்கு வந்தாச்சு. இனி தொடர்வோம்.

 நடக்க ஆரம்பித்ததிலிருந்து இல்லைனாலும், படிக்க ஆரம்பித்ததிலிருந்து ரெண்டு பேரும் ஒன்னா இருக்காங்க. ஆமா... யெஸ்... அ..னா... ஆ..வன்னா... கற்க துவங்கிய காலத்திலிருந்து தான். எப்படின்னா...? அவங்க பெயர்  தான் முக்கியமான காரணம். தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் பெற்றோர்களுக்கும் இதில் பங்கு உண்டு. ஒரே ஸ்கூல்...ஒரே க்லாஸ். இருவரின் பேரையும் சொல்லிப்பார்த்தால் - சா...ஹி...த்...யா! சி...த்...தா...ர்...த்! அதனால roll no.,reg no.,serial no.,alphabetical order என எந்த ஆர்டர்லயும் சாஹித்யா ஃபர்ஸ்ட் அண்ட் சித்தார்த் பாலோஸ் நெக்ஸட்!


ஸோ, அந்த காலத்து நட்பு.  இது நாள் வரையிலும் நட்புக்கு இலக்கணம், இலக்கியம், செய்யுள், கட்டுரை, முன்னுரை, முடிவுரை என முற்றுப்புள்ளி இல்லாமல் நீழும் அனைத்து முன்னுதாரணஙளாகவும் திகழ்கின்றனர் என்பதெல்லாம் இக்காலத்தில் வேலைக்கு ஆகாத ஒப்பீடுகள். 

 பலமான அதே சமயம் இவர்களின் நட்பிற்கு பாலமாக இருப்பது 'அண்டர்ஸ்டான்டிங்' மட்டுமே. ஒருவரை பற்றி மற்றொருவர் ஆழமாக புரிந்து வைத்திருந்தனர். ஆதலால்  பெரும்பாலும் இவர்களுக்குள் சண்டை வராது. அப்படியே தப்பித்தவறி வந்துவிட்டால்? இன்று சண்டை நாளை சமாதானம் என்ற பேச்செல்லாம் செல்லாது, குறைந்தது ஒரு வாரத்திற்காவது பேச்சு வார்த்தை இருக்காது. யார் பக்கம் தவறோ அதை உணர்ந்து 'சாரி' சொன்ன பின்னர் தான் சமாதான உடன்படிக்கை.

இதென்னவோ 'ஈகோ' ப்ராளம் மாதிரி தோன்றுதே என்றால் முற்றிலும் தவறான யூகம்.  நட்பிற்குள் 'சாரி & தேங்க்ஸ்' தேவையில்லை என்பதை மாற்றி தாரளமாக 'சாரியும் தேங்க்ஸ்யும்' பரிமாறிக்கொள்ளப்பட்டது இருவருக்குமிடையில். பரிமாறிக்கொள்ளப்பட்ட மற்றுமொரு ஜாலியான விஷயம் 'விஷ்ஷஸ்' அதாவது வாழ்த்துக்கள். பெர்த் டே , ஃப்ரண்ட்ஷிப் டே ல ஆரம்பிச்சு மதர்'ஸ் டே, பாதர்ஸ் டே கடந்து வுமென்'ஸ் டே, மென்'ஸ் டே தாண்டி எர்த் டே, வாட்டர் டே என ஏறக்குறைய 365 நாளும் ஒரு காரணம் கண்டுபிடிச்சு விஷ் பண்றது இருவருக்கும் இஷ்டமான ஒன்று. இதெல்லாம் ஜெனரல் நாலேஜ் அப்டேஷன்காகவும் தான் பாஸ்!

ஸ்பெஷல் அக்கேஷன்ல பெர்த்  டே அல்லது பெஸ்டிவல் நாட்கள்ல   சர்ப்ரைஸ் கிப்ட், ட்ரீட் எல்லாம் பழைய ஸ்டைல். அடுத்த நாள் அல்லது சிறிது  நாள் கழித்து, எது அப்போதைய தேவையோ அல்லது அவங்களோட ஆசைப்படி ரொம்ப நாள் வாங்கணும்னு நினைத்த ஒரு பொருளை ப்ரெசண்ட் பண்றது இவங்களோட ட்ரென்ட்!

 இப்படியெல்லாம் இருந்தாலும் வீடு, காலேஜ், லைப்ரரி தவிர வேறெங்கும் இருவரையும் ஒன்றாக காண முடியாது. "ஒரே மூஞ்சிய எவ்வளவு நேரம் தான் பார்ப்பது? போர் அடிக்காதா??" என்ற விளக்கம் இதன் பின்னணியில் இருவர் தரப்பிலும். நிஜத்தில் இருவரும் சுதந்திரமாக  தங்களது 'கமிட்மென்ட்ஸ்'க்கு நேரம் ஒதுக்கி செயலாற்றினார்.  

ஆரம்பம் முதல் ஒன்றாகவே இருப்பதாலோ என்னவோ இருவரின் 'மைன்ட் செட்டும் தின்க்கிங்கும்' தராசில் வைத்து நிறுத்தது போல எப்பவும் ஒருசேரத் தான் இருக்கும்.  ஸ்கூல் முடிச்சு காலேஜ். காலேஜ்ல யு.ஜி சாய்ஸ் ஒரே டிபார்ட்மென்ட், முடிச்சதும் எம்.பி.ஏ க்கு அப்ளிகேசன் என எல்லாம் சொல்லிவைத்ததை போல் ஒன்றாகவே நிகழ்ந்தது. சதியா இல்லை விதியா என்று தெரியவில்லை சாஹியின் எம்.பி.ஏ கனவு தொடரவில்லை. அவள் வேறு துறையில் மேற்படிப்பை தொடர்ந்தாள். சித்துவிற்கு மட்டுமே எம்.பி.ஏ சாத்தியப்பட்டது. இப்பொழுது இரண்டு வருட படிப்பும், பிரிவும்  உருண்டோடி படிப்பிற்கு முற்றுப்புள்ளியும் வைத்தாயிற்று.

இத்தனை இருந்தாலும் இருவருக்கும் ஒத்துப்போகாத குணநலன்கள் எண்ணிலடங்காதவை.ரெண்டு பேரும் இரு வேறு துருவங்கள். opposite pole attracts என்பதனால் தான் என்னவோ ஒட்டிக்கிட்டாங்க.

சித்து மாடர்ன் பையன் - சாஹி ட்ரடிஷனல் பொண்ணு.சித்து ரொம்பவெ  பிராக்டிகல் - சாஹி ரொம்பவே சோசியல். சித்து ஒரு 'ஓபென் புக்' - சாஹி             'ஸெல்ப் சென்ட்ர்ட்'.  ' பேஷன் அண்ட் இண்ட்ரெஸ்ட்' க்கு நீண்ட லிஸ்ட் இருக்கும் சித்துவுக்கு - சாஹி ஆல்மோஸ்ட் செய்வது எல்லாமே பிடித்திருந்தால் மட்டுமே, பலவற்றையும் பிடித்ததாக மாற்றிக்கொள்வாள். சித்து 'ஷார்ட் டெம்பர்ட்' - சாஹி பொறுமையின் மறு உருவம். சித்து 'ஜஸ்ட் லைக் தட்' னு வாழ்க்கையை என்ஜாய் பண்றான் - சாஹி வாழ்க்கை என்றால் இப்படித்தான் என்று 'ஸ்டான்டர்ட்'ஆ  பிக்ஸ் ஆயிட்டாள்.  சித்து விற்கு ப்ரெண்ட்ஸ் கேங் உண்டு, ஆனால் 'ரிலேஷன்சிப்' ல அவ்வளவா நம்பிக்கை இல்லை - சாஹிக்கு ப்ரெண்ட்ஸ் தான் எல்லாமே. அவர்கள் ஒருவருக்கொருவர் துணையாக, நட்போடு இது வரை வந்ததற்கு காரணமாக அமைந்ததும் இந்த கடைசி கருத்தாகவே இருக்கவேண்டும் .

சாஹிக்கு சித்து பத்தின எல்லாமே அத்துப்பிடி. சித்துவிற்கு சாஹி தன் குடும்பத்தில் ஒருத்தி போல. அப்படிஇருக்க இருவரின் கருத்துப்படி "லவ் இஸ் நாட் எ ஃபாண்டஸி ஆர் சம்திங்க் டு பி ஃபாஸினேடெட்"  என்பதால் அவர்களுக்குள் மன சஞ்சலமின்றி ஒருமித்து பயணிக்க முடிந்தது. அதில் இப்பொழுது என்ன நேர்ந்துவிட்டது என்பது தானே கிளைமாக்ஸ்.

சித்து எம்.பி.ஏ முடித்து கனடாவிற்கு செல்கிறான் பணியில் சேர. ஒரு மணிநேரம் அவர்களுக்கு போதவில்லை இரண்டு வருட கதை பேசிமுடிக்க.
மணி 2:30 ஆகிவிட்டது. சரியாக 3:30 க்கு சித்து விற்கு ப்ளைட். அஷ்வின் திரும்பி வந்தாயிற்று சாஹியின் அம்மா, அப்பா மற்றும் சாஹி-சித்துவின் நண்பர்களோடு.

சாஹிக்காக சித்து வலை வீசி தேடிப்பிடித்த மாப்பிள்ளைதான் அஷ்வின். அவளுக்கு பிடித்தவாறு இருக்க வேண்டுமென்று சித்து மிகவும் சிரத்தை எடுத்து கண்டுபிடித்திருந்தான், தங்கள்  இருவருக்கும் பிடித்ததை விட்டுக்கொடுக்கப் போகிறோம் என்ற நிலையறியாமலேயே. சாஹிக்கும் அஷ்வினை பிடித்திருந்தது - அவன் சித்துவின் செலெக்க்ஷன் ஆயிற்றே!

சாஹி-சித்து என்பதே இத்தனை காலமும் இவர்களுடைய ஜெபமந்திரமாக இருந்தது, ஒருவரையொருவர் பெயர் சொல்லி அழைபார்களே தவிர போடா-போடி என்று ஒருபோதும் அழைத்ததில்லை. காரணம் தங்களுக்கு வரப்போகும் ஒருவனை/ஒருத்தியை மட்டுமே செல்லமாக அவ்வாறு அதட்டுவது என்று தங்களுக்குள் முடிவெடுத்திருந்தனர்.

புறப்பட வேண்டிய நேரமாயிற்று. சித்து அனைவரிடமும் விடைபெற்று போர்டிங்காக உள்ளே செல்ல ஆயத்தமானான். அவனையும் அறியாமல் "சாஹி ஐ மிஸ் யூ டீ!" என கை குலுக்கிவிட்டு திரும்பி பார்க்காமல் சென்று மறைந்தான். அதன் அர்த்தம் புரிந்து திடுக்கிட்டவளாய் " ஐ மிஸ் யூ டூ டா சித்து!"  என்று பதிலுக்கு அவனிடம்  சொல்லமுடியாததனால் கண்களில் இருந்து வழிந்த ஒரு துளி கண்ணீர் கன்னத்தை நனைத்தது.

ஒருவரை மற்றொருவர் நன்றாக புரிந்து கொண்டதால் என்ன பயன்? தங்களை தாமே  இருவரும் புரிந்து கொள்ள இத்தனை வருடங்கள் ஆனது. ஆனால் பிரியும் தருவாயில்  நொடிப்பொழுதில்  தன்  உள்ளத்தில் மறைந்திருந்த அன்பை சொல்லாமல் சொல்லிய கண்ணீரை துடைக்க மனமில்லாமல் சித்துவையே  பார்த்தபடி  சிலையாக நின்றிருந்தாள் அவனை மறுபடி பார்க்கப்போகும் நாளை எதிர்நோக்கியவளாய்.

!!!---!!!
 

Saturday, February 9, 2013

ஐந்தறிவா? ஆறறிவா?

ஐந்தறிவா? ஆறறிவா?

       நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசய நிகழ்வுகளின் பட்டியலில் இது மிக முக்கியமான ஒன்று - ரெனோ அமைதியாக அமர்ந்திருந்தது. ஏய் நாயே! அமைதியாக இரு என கேட்கும் அதட்டலுக்கும் அதற்கு பதிலாக ரெனோவிற்கு வரும் கோபத்திற்கும்  தற்சமயம்  வேலை இல்லை.

     தன் வீடு மட்டுமல்லாமல் எதிர் வீடு, பக்கத்து வீடு, தெரு முனையிலிருக்கும் வீடு என அந்த தெரு முழுவதற்கும்  ஒரே செல்லப்பிள்ளை என்ற அகந்தை சற்று அதிகமாகவே இருந்தாலும் தெருவையே ரெனோ கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததென்னவோ ஏற்றுகொண்டாகவேண்டிய நிதர்சனமான உண்மை.  தன் அனுமதி இல்லாமல் யாரும் எந்த வீட்டிற்குள்ளும் நுழையவோ, சொல்லிக்கொள்ளாமல் வெளியேறவோ முடியாது. அவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆபீசர்.

             பெருமைகள் பலவற்றிற்கு புகலிடமாக இருக்கும் ரெனோவிற்கு  சில பல பிடிக்காத விஷயங்களும் இருந்தது. அவை பற்றிய சுவாரஸ்யமான தொகுப்பு :

1. தண்ணீர் - 'ஆல் டைம் அலர்ஜி! '. மழை அறவே ஆகாது. குடிப்பதற்கு கூட தண்ணீர் தொடுவது சந்தேகமே. புரியுது உங்களின் புருவம் உயருவதற்கான காரணம் 'அப்போ குளியல்?!?' அதுதானே? அது தண்ணீர் சேமிக்கும் முயற்சி. ரெண்டு மூனு  மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே. அதுவும் சாதாரணமாக அல்ல ஒரு போராட்டமே நடத்த வேண்டியிருக்கும். இல்லையெனில் தீபாவளி பொங்கல் என வருடத்திற்கு ஒரு முறை என்றாலும் டபுள் ஓ.கே. குஷியோ குஷி தான்.

2. சத்தம் - 'ஷ்ஷ்ஷ்... மெயின்டயின் பின் ட்ராப் சைலன்ஸ்'. யாராக இருந்தாலும் அனாவசியமாக பேசுவதோ, சிரிப்பதோ, சண்டையிடுவதோ கூடவே கூடாது. ஆனால் 24 மணி நேரமும் 'ஆன் ட்யூட்டியில்' இடைவெளியின்றி கேட்டுக்கொண்டிருக்கும் நான்-ஸ்டாப் கொண்டாட்டம் ரெனோவின் சத்தம் மட்டுமே. அனைவருக்கும் பழகிப்போன அதே சமயம்  யாராலும் நிறுத்த முடியாத ஆட்டோமேட்டிக் அலாரம் சிஸ்டமாகவே மாறி இருந்தது.

3.குழந்தைகள் - 'ஏலியன்ஸ்' . நம்பர் ஒன் எதிரிகள். தன் வேலை உண்டு தான் உண்டு என்று இருப்பவரிடம் வேண்டுமென்றே சென்று வம்பு செய்தால் யாருக்கும் கோபம் வரத்தானே செய்யும். அதிலும் ரெனோவிற்கு கேட்கவே வேணாம் - சற்று அதிகமாகவே வரும்.ரெனோவை வம்பு செய்வதில் குட்டீஸ்களுக்கு அலாதியான பிரியம். பக்கத்து தெருவிலிருந்தும் வந்து கலாய்ப்பதும் கிண்டலடிப்பதும் தனக்கு எதிராக அரங்கேறும் குற்றமாகவே பார்த்தது. ஆனாலும் விட்டுவிடாமல் நீயா-நானா என்று பார்த்துவிட்டு தான் அடுத்த வேலையே. இப்படி ஆரம்பித்ததுதான் படிப்படியாக வளர்ந்து தற்போது முடிவுக்கு வராத மிகப்பெரிய 'ஈகோ' பிரச்சனையில் வந்து  நிற்கிறது. இந்தியா-பாகிஸ்தான் பார்டர் பஞ்சாயத்து கூட முடிவுக்கு வந்து விடும் ஆனால் இந்த 'சின்ன' பிரச்சனையின் முடிவு - கணிக்க முடியாத ஒன்று.

4.விருந்தினர்கள் - 'பீவேர் ஆப் மீ '. வீட்டுக்கு வெளியே நின்று பேசுவதற்கு கூட தடை சட்டம் அமலில் உள்ள போது வீட்டுக்குள் விருந்தாளிகளை அனுமதிப்பது எந்த யுகத்திலும் நடந்தேறுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. அப்படியே எதிர்ப்பை மீறி வீட்டுக்குள் வந்தவர்கள் ஏண்டா வந்தோம்?!?  என்னும் அளவிற்கு கவனிப்பு பலமாக இருக்கும். தில் இருப்பவர்கள் முயன்று பார்க்கலாம்.

5. பட்டாசு - 'ஸ்டிரிக்ட்லி  நாட் அல்லவ்ட்!'. நான் இங்கே தனி ஆளா கிடந்து திண்டாடுறேன் உங்களுக்கு என்னடா கொண்டாட்டம் வேண்டி இருக்கு என்று ஒவ்வொரு வெடி சத்தத்திற்கும் அசராமல் பதில் கொடுத்து கொண்டே தான் இருக்கும். ஆக மொத்தம் பட்டாசு சத்தத்தை காட்டிலும் ரெனோவின் அலறல்தான் அதிரடியாக இருக்கும்.

             இவை அனைத்தும் சின்ன சாம்பிள் மட்டுமே, பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவ்வாறு செய்வதை எல்லாம் செய்துவிட்டு ஒன்றும் தெரியாததை போல 'நான் ரொம்ப நல்லவன்' என்ற பாணியில் சீன் போடும் ரெனோ நிஜமாகவே நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதும் உண்டு. இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் பல சமயங்களில் ஆறறிவு படைத்த விலங்குகளிடம் கூட எதிர்பார்க்க முடியாதது  ஐந்தறிவு கொண்ட விலங்கிடம் இயல்பாக அமையப் பெற்றிருந்தது - மனிதத்தன்மை!

             முகம் தெரியாத நட்பு, பெயர் தெரியாமல்  காதல் என்கிற ரீதியில் இது ஒரு புதுவிதமான நிகழ்வு. பொதுவாக அன்பு செலுத்துவர்களிடம் திரும்ப அன்பு செலுத்துவது இயற்கையின் நியதி. அன்பு செலுத்துபவர்களை புறக்கணிப்பவர்கள் தனி ரகம். ஆனால் எப்பவுமே கிடைக்கப்பெறாத அன்பிற்கு அடிபணிவது மிதமிஞ்சிய தன்மை - வெகு சிலருக்கே முடியும். ரெனோவின் இத்தகைய அரிதான பாசத்திற்குரிய நபர் ஒரு சிறுமி. எத்தனையோ சிறுவர் சிறுமியர்களை கண்டவுடனேயே தலை கால் தெறிக்க ஓட வைக்கும் ரெனோ இதுவரை பார்த்திராத இனிமேலும் பார்க்க இயலாத ஒருத்தர் மீது அளவுகடந்த அன்புடன் நடந்து கொள்வது அதிசயிக்கத்தக்கது.

          வைஷ்ணவி - பெயரைப்போலவே அவளும் அழகு. பள்ளி சென்றிருந்தால் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வயது.  அவளுக்கு மிகவும் பிடித்தது அமைதி. அவளால் உணர முடிந்த மன நிறைவை தரக்கூடிய ஒரே விஷயம் பாட்டு கேட்பது. வீட்டுக்கு வெளியே அவளை பார்க்கவே முடியாது. இருந்த இடத்திலிருந்து நகரவே மாட்டாள். எப்பொழுதும் அவளை பார்த்துக்கொள்ளவும் வேலைகளில் துணை புரியவும் அவளருகே  ஒருவராவது இருந்து கொண்டே தான் இருப்பர் ஏனென்றால் அவளால் மற்ற சராசரி குழந்தைகளைப்போல பேசவோ, சாப்பிடவோ, விளையாடவோ முடியாது. செய்யாத குற்றத்திற்காக பிறந்ததிலிருந்து தண்டனை அனுபவிக்கும் ஜீவன் ஆனால் நாள்தோறும் அன்பை மட்டுமே எதிர் நோக்கி தன் வாழ்கையை  உன்னதமாக  மாற்றி இருக்கிறாள். இந்த நிலைக்கு சமூகம் சூட்டிய பெயர் மாற்றுத்திறனாளி. ஒரு விதத்தில் உண்மை தானே?  நிறைந்த உடல் நலத்துடன்  நல்லறிவையும் பெற்றிருப்பவர்களுக்கு  அன்பின் மதிப்பை உணருவதற்கான திறன் வாய்ப்பதில்லை. எனவே வைஷ்ணவி இந்த விதத்தில் மட்டுமல்லாமல் எல்லா  நிலையிலும் ஸ்பெஷல் தான்.

              தன் தேவைகளை உணர்த்தவும் சந்தோஷம், கவலை போன்றவற்றை வெளிப்படுத்தவும் அவளறிந்த ஒரே மொழி மற்றும் வழி சத்தமாக அழுவது மட்டுமே. அப்படியிருக்க ஒரு நாளைக்கு இத்தனை முறை என்ற கணக்கேதும் இன்றி அழுகுரல் கேட்பது சில நேரங்களில் பலருக்கும் தொந்தரவாக அமைவது சகஜமே. விதிமுறைகளை அடுக்கி அவைகளை மற்றவர்கள் கடைபிடிப்பதில் குறை இல்லாமல் பார்த்து வரும் ரெனோ தான் பின்பற்றும் விதிமுறைகளை தளர்த்தி மென்மையாக நடந்து கொண்டது.

            ஒருமுறை வைஷ்ணவியின் அழுகுரல் கேட்டுவிட்டால் வேறு எந்த தலை போகிற பிரச்சனையில் மூழ்கி இருந்தாலும் அதனை தள்ளி வைத்துவிட்டு அழுகுரல் நின்ற பிறகே நிம்மதிப் பெருமூச்சு விடும். அவளை கவனிக்க ஆளில்லை என்றால் தானே போய் என்னவாயிற்று என்று பார்த்துவரும் அளவிற்கு நிலை கொள்ளாது அங்கும் இங்கும் சுற்றித்திரிவதும், அருகில் யார் இருந்தாலும் அவர்கள் பக்கம் வந்து சத்தம் வரும் திசையை கவனிக்க செய்வதும், கூக்குரல் கொடுத்து தானும் அழுவது என  யாரும் சொல்லிக்கொடுக்காமல் எந்த ஒரு பயிற்சியுமில்லாமல் ரெனோவின்  நியாயமான பாசத்திற்கு சான்றாகும் செய்கைகளில் சில.

             என்னதான் வீட்டின் பாதுகாப்புக்காகவும், சிலர் பிரியத்துடனும் வளர்க்க நேர்ந்தாலும் மனிதனை விட அறிவில் குறைந்த ஜீவனாக வலம் வரும் ரெனோவைப்போன்ற விலங்குகளை மட்டுமே விவரிக்க பயன்படுத்தும்  'நன்றியுள்ள' என்ற  அடைமொழி எக்காலத்துக்கும் அவற்றிற்கு கனக்கச்சிதமாக பொருந்தும். அப்படியிருக்க எந்த கணக்கின் அடிப்படையில் ஆறறிவு உயர்ந்தது?

!!!---!!!

Monday, December 17, 2012

பிடித்ததும்... படித்ததும்...


பிடித்ததும்... படித்ததும்...  
        
       கார்நேசன் முடிவெடுத்துவிட்டான். ஒரு மாதம். அதாவது இன்றிலிருந்து சரியாக 30 நாட்கள். நினைக்கும் போதே சிறு தடுமாற்றம். நிறைவேற்றிவிடுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டா என்ற மனப்போராட்டம்.

              இந்த கசப்பான முடிவின் பின்னணியில் சில பேர்வழிகளின் வசைபாடல்களும் கோரத்தாண்டவமும் மட்டுமே அணிவகுத்து நின்றது. இவையன்றி வேறெந்தவொரு நியாயமான காரணமும் வலு சேர்க்கவில்லை.

             'பழகப் பழக பாலும் புளிக்கும்' என்ற கூற்று பழமொழி என்பதையும் தாண்டி பழைய மொழி என்றாகிவிட்ட இக்காலத்தில் அளவுக்கதிகமாக பழகியதனால் தான் என்னவோ கூடுதலாக பிடித்திருந்தது. மறப்பதற்கு மனமில்லை. பிடித்ததை நினைக்காமல், பார்காமலிருப்பது எளிதல்லவே. இருந்தும் ஒரு முயற்சி.

                 துவக்கத்தில் பெரிய மாற்றம் நேருமென்ற உணர்வேதுமில்லை. போகப் போக  ஊனின்றி உறக்கமின்றி இடைவெளி குறைந்து இணக்கம் மிகுந்தது. விளக்கை அணைக்காமல் கண் அயர்ந்த நாட்களில் கனவில் தொடர்ந்த கதைகளும் உண்டு. நடு இரவு கடந்து அதிகாலை வரை நீண்ட பரிமாற்றங்களில் பல விடியல் பொழுதுகள் புலர்ந்ததும் உண்டு .

                   வீட்டிலுள்ளவர்களின் அர்ச்சனைகளும் நண்பர்களின் கேலியும் கிண்டலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்க இசையவில்லை. பாவம்! அவர்களுக்கு எப்படி புரியும், அனுபவித்து உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புலப்படும் சுகம் அது.

             ஒரு நாளைக்கு 24 மணி நேரமென்பது அனைவருக்கும் பொதுவான நியதி. மணித்துளிகள் கரைந்தோடுவதும், சற்று அதிகமாக இருந்திருக்கலாமென தோன்றுவதும் இதிலகப்பட்டவர்களுக்கான இயல்பே. தடை செய்ததன் விளைவு, நேர்மாறாக இன்று ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம்போல கழிந்தது.

             
                எள்ளளவும் கவனம் சிதறாமல்,மற்ற எதிலும் கவனமில்லாமல் சென்று கொண்டிருந்த பிரகாசமான  பாதை திடீரென்று இருட்டடித்தது. சில சமயங்களில், 'உன் வாழ்வு உன் கையில்' என்பதை கடைபிடிப்பவர்களை விட 'உன் வாழ்வு முடிந்தவரை பிறருக்கு சந்தோஷத்தை கொடுத்து சங்கடத்தை தவிர்க்குமானால் அதுவே சிறந்த அறம்' என்பதை பின்பற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறவர்களே அதிகம். அதிலிருந்து தானும் தப்பவில்லை எனினும் இந்த முயற்சி மறுப்பதற்கோ மறப்பதற்கோ அன்று, ஞாபகத்தில் நிலைநிறுத்திக் கொள்ளவும் பிறருக்கு புரிய வைக்கவும் கிடைத்த 
ஆயுதமென நினைத்தான் கார்நேசன் .

           
         நிரந்தரமாக இணைந்திருக்க தற்காலிகமான சிறு பிரிவு அவசியமென்பதை உணர்ந்தவனாய் சிலர் தெரிந்தோ தெரியாமலோ தடைவிதித்தது தனக்கு செய்த நன்மையே என்றும் அத்தடையை துவம்சம் செய்து முன்னேறுவதற்காகவும்  நம்பிக்கையோடு காத்திருந்தான்.
 
             காத்திருப்பு வீண்போகவில்லை. இதோ 15 நாட்களுக்குப் பிறகு வந்தது ஆச்சரியம் கலந்த அதிர்ஷ்டம். அவன் பெயரில் இரண்டு பார்சல்கள். ஒன்று லேசாகவும் மற்றொன்று கனமாகவும் இருந்தது.

            முதலில் லேசான பார்சலை பிரித்தபோது கனமான மகிழ்ச்சி மனதில் ஒட்டிக்கொண்டது. அவனது  கனவு வேலைக்கான ஆர்டர் அது.

            கனமான கவரில் இருந்த விஷயம் அவன் மனதை லேசாக்கியது. 'பிடித்ததையும் படித்ததையும் மறந்துவிடாதே' என்ற குறிப்போடு வந்திருந்தது புத்தகப் பார்சல். என்றோ ஒரு நாள் சிறுகதை போட்டிக்காக 'புத்தகக் காதல்' என்ற தலைப்பில் தன் அனுபவத்தை எழுதியதற்காக  இன்று தக்க நேரத்தில் கையில் கிடைத்தது  பரிசு.

           தனக்கு முற்றுக்கட்டை போட்டவர்களின் முகத்துக்கு நேராக வேலைக்கான ஆர்டரை கொடுத்துவிட்டு, அரை மாதமாக நிறுத்தி வைத்திருந்த புத்தகங்களுடனான சிநேகிதத்தை புதுப்பிக்க முனைந்தான்.
                   
             புத்தகத்தின் மேல்புறத்தில் சிறிய வண்ணத் தாளில் எழுதியிருந்த குறிப்பு கார்நேசனின்  வாழ்க்கையை புதிய பரிமாணத்தில் வண்ணமயமாக மாற்றக் காத்திருந்தது. மீண்டும் ஒரு முறை அக்குறிப்பை படித்தான் - 'பிடித்ததையும் படித்ததையும் மறந்துவிடாதே'.அது அவனது மூளையில் பலமுறை எதிரொலித்தது.  

!!!---!!!

Wednesday, August 8, 2012

THODARUM



தொடரும்

நான் எனது போலீஸ் படையுடன் அந்த வீட்டை சுற்றி வளைத்துவிட்டேன். அந்த சரியான தருணத்திற்காக காத்திருந்தேன்.

நான் - பாஸ்கரன் எஸ்.ஐ, கிரைம் பிரான்ச். கடந்த மூன்று மாதங்களை முழுக்கமுழுக்க செலவு செய்த்தது, சுந்தரத்தை பிடிப்பதற்காக மட்டும்தான். பல உளவுப் படைகளின் உதவிகளைக்கொண்டு இறுதியாக, நாகராஜன் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சுந்தரம் பதுங்கியிருக்கும் இடமென கிடைத்த தகவலின் பேரில் இரவு மூன்று மணிக்கு, முப்பத்து எட்டு பேர் கொண்ட போலீஸ் படையுடன் அந்த ஒற்றை வீட்டை சுற்றிவளைத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வீட்டின் கதவை தகர்த்து உள்ளே சென்று பார்த்தபோது.. எனக்கு கிடைத்தது சில காலாவதியான செய்தித்தாள்களும், அவசரத்தில் அவன் விட்டுச்சென்ற அழுக்குத் துணிகளும், நிறைய ஏமாற்றம் மட்டும் தான்.

நிச்சயம் சுந்தரம் இங்கிருந்திருக்கவேண்டும். கொஞ்சம் முன்னம் வந்திருந்தால் சிக்கியிருப்பான். முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்த இந்த 'நாகராஜன் கொலை' அத்யாயம் மீண்டும் தொடர்வதைக் கண்டு என்னை நானே நொந்துகொண்டேன்.

அன்று இரவு, என் வீட்டில் உறக்கம்கொள்ளாமல் பல சிந்தனைகளில் நான் ஆழ்ந்தேன்.

நாகராஜன் யார்?

தென்காசி மாவட்டம் வள்ளம், அவன் சொந்த ஊர். ஊர் டிரஸ்டியின் இரண்டாவது மகன். சௌகரியாமன இளமைப்பருவ வாழ்க்கை. திடீர் என்று நிகழ்ந்த அரசியல் தகராறில் மாஜி எம்.எல்.ஏ.கண்ண்ப்பமுதலியார், நாகராஜனின் அப்பா மற்றும் அண்ணனை குத்திக் கொல்ல, தற்காப்புக்காக கண்ணப்பனின் எதிர் அணியான ராமலிங்கத்திடம் தஞ்சம் அடைந்தான். கண்ணப்பனை எப்படியேனும் கொன்றுதீர்ப்பேன் என்று பலர் முன்னிலையில் சூளுரைத்தான்.

இருபது ஆண்டுகளில், ராமலிங்கத்தின் மறைவிற்குப் பிறகு, தனக்கென்று ஒரு படை திரட்டிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து, ஜாதிக்கட்சியென வாழ்வை ஓட்டிக்கொண்டிருந்த நாகராஜன், இரண்டு ஆண்டுக்கு முன் கண்ணப்பனை கொலைசெய்யும் முயற்ச்சியில் இறங்கி, கண்ணப்பன் சென்ற காரில் குண்டு வீசி தன் தந்தையையும் அண்ணனையும் கொன்றதற்காக பழி தீர்த்துக்கொண்டான்.

பகைதீர்த்த உற்சாகத்தில் கம்பீரமாக சுற்றித்திரிந்த நாகராஜன், மூன்று மாதத்திற்கு முன், அவன் வீட்டிலேயே, அதிகாலை 5.30 மணிக்கு ஒரு முகம் தெரியாத ஆசாமியால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இது ஒரு சராசரி ரௌடியின் வாழ்கை வரலாறாக அன்றே முடிந்திருந்தால் எனக்கு இன்று எந்த சங்கடமும் இருந்திருக்காது.

நாகராஜன் இறந்த மூன்றாவது நாள், அவனது ஜாதிகட்சியினர், சுட்டவனை கோட்சே'வாகவும், நாகராஜனை மகாத்மா'வாகவும் உருவேற்றி, மாநிலம் தழுவிய போராட்டம் மேற்கொண்டு, அன்று விழுந்தது என் தலையில் இடி!

'போலீஸ் தூங்குகிறதா?' 'தலித்து மக்களுக்கு நீதி வேண்டாமா?' போன்ற போஸ்டர்கள் எனக்கு அளிக்கப்பட்ட கடமைக்கு அழுத்தம் சேர்த்தது. இது போன்று அழுத்தம் அதிகாமான நேரங்களில் நான் சந்திக்கும் ஒரே நபர், வக்கீல் கணேஷ்.

கணேஷ், “ஒவ்வொரு போலீஸ்கும் ஒவ்வொரு கேஸ் லைஃப் டைம் கேஸா அமையும். இது உனக்கு. எல்லா கார்ணர்ல இருந்தும் டார்கெட் பண்ணு. என்னால முடிஞ்ச உதவிய நான் பண்றேன்”

கணேஷின் வார்த்தைகள் எனக்கு புது தெம்பை தந்தது. இந்த வழக்கில் என்னை முழுவதுமாக செலுத்திக்கொண்டேன். ஆரம்ப நாட்களில் பலர் என் சந்தேக வட்டத்தினுள் இருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் விலக, மிச்சம் இருந்தது சுந்தரம் மட்டும் தான்.

சுந்தரம் - கண்ணப்பமுதலியாரின் வளர்ப்பு மகன். ஆழமாக சென்று பார்த்ததில், கண்ணப்பனுக்கும் அவன் தோட்டத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கும் பிறந்தவன். நாகராஜனை கொலை செய்ய சுந்தரத்திற்கு போதிய காரணம் இருக்கிறது. பழைய பகை. தன் தந்தையை கொன்றவனை தானே கொல்லவேண்டும். பழிக்குப்பழி. செய்துமுடித்தான்.

அன்று ஆரம்பித்தது இந்த வேட்டை. சுந்தரம் பற்றிய அனைத்து தகவல்களும் சேகரித்தேன். தன் இரையை குறிவைத்து, மூச்சுச் சத்தம் கூட வெளிவராமல் பதுங்கியிருக்கும் புலியைப்போல் அவன் மறைந்திருந்த வீட்டை நெருங்கினேன். எங்கோ தப்பு நடந்திருக்க வேண்டும். இந்த முறையும் கோட்டை விட்டாச்சு. ஓசி குவாட்டருக்காக நாட்டையே விற்றுவிடும் சில போலீஸ்காரர்கள் இருக்கும் வரையில் இது போன்ற ஏமாற்றங்களை ஜீரனித்துக்கொள்ளத்தான்வேண்டும்.

அதன் பிறகு மீண்டும் ஒரு மாதம் முயற்சித்தேன். இந்த முறை நிச்சயம் சுந்தரத்தை பிடித்துவிடலாம் என்று எண்ணிய மாத்திரத்தில் அறிவிக்கப்பட்டது தேர்தல் தேதி.

சரியாக நாற்பது நாள். அத்தனை கேஸ்களையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, முழுக்கமுழுக்க தேர்தல் வேலைகளில் இறங்க வேண்டி மேலிடத்து உத்தரவு. இந்த நாட்களில் வக்கீல் கணேஷும் கூட ஏதோ நடிகையின் கேஸ் விஷயமாக லண்டன் சென்றுவிட்டார்.

அதற்குள் அத்தனை அரசியல் தலைவர்களும் குலுக்கிய சீட்டுக்கட்டு கார்டுகளைப்போல் ஒவ்வொரு அணியில் கொள்கை பேதமின்றி இணைந்துகொண்டனர்.

என்னை வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு அதிகாரியாக நியமித்திருந்தனர். ஏறக்குறைய அத்தனை மாவட்டங்களிலும் தேர்தல் முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி, எதிர்பார்த்தது போல் எதிர்கட்சி வென்று, ஆளுங்கட்சி தோற்று..அனைத்தும் முடிந்து, ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.

சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு சுந்தரத்தை தூசி தட்டினேன்.

என் வாக்கி-டாக்கி கீரிட்டது. என் மாவட்ட எம்.எல்.ஏ அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கச் செல்வதாகவும், அவருக்கு பந்தோபஸ்துக்கு நான் செல்லவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தது. சுந்தரத்தை மேசைமேல் வைத்துவிட்டு அண்ணா சாலைநோக்கிச் சென்றேன்.

எதிர்பார்த்தபடியே சரியாக ஒன்றரை மணி நேரம் தாமதமாக, பெருத்த ஆராவாரத்துடன், ஆளுங்கட்சி கொடியேந்தி ஒரு பெருங்க்கூட்டம் வந்தது. எம்.எல்.ஏ'வும், கவுன்சிலர்களும், இன்ன பதவி என்று சொல்லமுடியாத எம்.எல்.ஏ'வுடன் கோஷமிட்டு வந்தோரும் சிலைக்கு மாலை அணிவிக்க, நான் கொஞ்சமும் எதிர்பாராத அதிர்ச்சி என்னை தாக்கியது. ஏழாவதாக மாலையிட்டது சந்தேகமேயில்லாமல் நான் தேடிக்கொண்டிருக்கும் சுந்தரம்.

நடப்பதை என்னால் நம்பமுடியவில்லை. உடனடியாக ஸ்டேசன் சென்று மற்ற அதிகாரிகளை விசாரித்ததில், அவன் நாற்பத்து நாலாவது வார்டு கவுன்சிலர் ஆனது தெரியவந்தது. இது பற்றி மேலிடத்தில் அணுகியபோது அவன் ஆளுங்கட்சி எனவும், அவன் மீது உள்ள வழக்கை இப்போதைக்கு தொடவேண்டாம் எனவும் உத்தரவிட்டனர்.

இரண்டு நாட்கள் கழிந்தது. இன்னும் என் கோபம் குறையவில்லை. ஸ்டேசனில் எல்லோரும் என்னைப் பார்த்து நகைப்பது போன்று தோன்றியது. என்னால் ஸ்டேசனில் இருக்கமுடியவில்லை. வெளியே வந்து என் ஜீப்பில் அமர்ந்துகொண்டேன். வக்கீல் கணேஷ் ஊர் திரும்பியது ஞாபகம் வந்தது.


நான், “என்னமோ என் லைஃப் டைம் கேஸ்'னு சொன்னீங்களே. எப்படி முடிஞ்சு போச்சு பாத்தீங்களா? இந்த பேப்பர பாருங்க. ஃபோட்டோ போட்டிருக்கான். நான் சுந்தரத்துக்கு பாதுக்காப்பு கொடுத்துட்டிருக்கேன்... ச்சே... இந்த காக்கிச்சட்டைய போடறதுக்கே உடம்பெல்லாம் கூசுதுங்க. பேசாம வேலைவேண்டாம்னு எழுதிகொடுத்திட்டு எதாவாது பேங்க் வேலைக்கு அப்ளைபண்லாம்னு தோனுது.”

இத்தனையும் அமைதியாக கேட்டுக்கொண்டு சின்ன புன்னகையுடன் “கூல் டவுன் பாஸ்கர்”, கணேஷ்.

ஐம் கூல் கணேஷ். ஆனால்... என்ன இருந்தாலும் ஜஸ்டிஸ்'னு ஒன்னு இல்லாம போயிடுச்சேன்னுதான் வருத்தமா இருக்கு. அப்பட்டமா ஒரு கொலை செஞ்சவன் இப்ப நிம்மதியா சுத்திட்டு இருக்கானே. அவன யாருதான் தண்டிக்கிறது?”

கணேஷ் அதே புன்னகையை கொஞ்சம் பெரிதாக்கிக்கொண்டு தன் மேசைமேல் இருந்த நாளிதழை பாஸ்கரிடம் நீட்டினான்.

அதில் மாவட்டச் செய்தியில் மத்தியில் வாசித்தான். ' டாஸ்மாக் ஊழியர் படுகாயம்! குடிபோதையில் தாக்கிய இளைஞர் கைது!'

நான்,”இதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?”

“அந்த குடிபோதையில் அடிச்சவன் வேற யாருமில்லை. நாகராஜனோட மகன். கவலைபடாம நீ வீட்டுக்குப் போ. உன் கேஸுக்கான ஜுட்ஜ்மென்டை இவன் பார்த்துப்பான். பழிக்குப்பழி தொடரும்!



----தொடரும்----




Monday, August 6, 2012

பொக்கிஷம்!


பொக்கிஷம்!

மண்ணைத் தோண்டி கடலின் தரைமட்டத்தில் புதையுண்டு கிடக்கும் தாதுக்களிலிருந்து, விண்ணைத் தாண்டி பிரபஞ்ச வெளியில் மிதக்கும் நுண்ணிய துகள்கள் வரை இயற்கை மறைத்து வைத்திருந்த அனைத்து ரகசியங்களையும் கண்டறிந்து கைவசம் வைத்திருந்த மனிதன் வாழும் தற்போதைய நவீனயுகத்தில் பிறந்த அதிர்ஷ்டசாலியான என் பெயர் ரித்விக்.

தற்போது பள்ளியில் பயிலும் மாணவன். பின்னாளில், அறிவியல் சார்ந்த துறையில் உலகம் போற்றும்படியான சாதனை புரியவேண்டுமென்ற லட்சியம் மனதோரம் குடிகொண்டுள்ளது. எப்பவும் எனக்கு முதல் இரண்டு நண்பர்கள் அம்மாவும் அப்பாவும் தான். அவர்கள் இருவரும் விண்வெளி அறிவியல் சார்ந்த துறையில் பணியாற்றுவதால், என்னுடைடைய இலட்சியத்தைப் பற்றி பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு தனியாக எத்தகைய காரணமும் தேவையில்லை.

ஒரு நாள் மாலைப் பொழுதில் பள்ளியில் இருந்து திரும்பிய நான், வழக்கமாக என்னுடைய வருகைக்காக ஆவலாக காத்திருக்கும் அம்மாவிடம் சென்று அன்றைய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளவும் இல்லை, அப்பாவுடன் சேர்ந்து ஷட்டில் விளையாடவும் செல்லவில்லை. ஒருவித மனக்குழப்பத்துடன், நேராக எனது அறைக்கு சென்று ஓய்வெடுக்க விரும்பி, ஜன்னலின் ஓரமிருந்த எனது 'டபுள் காட்'டின் மேல் படுக்கையில் ஏறி படுத்து கண்மூடினேன்.

வீட்டில் யாரவது ஒருவருடன் சின்னதாக சண்டை போட்டால் மட்டுமே செல்லமானதொரு கோவத்துடன் நான் இப்படி இருப்பேன் என்று அவர்களுக்கு தெரியும். ஆனால் நேற்றைக்கு அவ்வாறு ஏதும் நடக்காதபோதும் என்னுடைய இத்தகைய செயலுக்கு காரணம் புரியாமல் இருவரும் சற்று குழம்பி இருக்ககூடும், இருந்தும் எதையும் அத்தருணத்தில் பொருட்படுத்தத் தோணவில்லை.

எதிர்பார்த்தவாரே, என்னவாயிற்றோ என்ற பதற்றத்தில் என்னை காண வந்த அம்மாவும் அப்பாவும் நான் கூறிய காரணத்தை கேட்டதும் "ரித்து, ரொம்ப பயந்தே போயிட்டேன்! இதுக்கா இவ்வளவு பீலிங்?" என அம்மாவும் "சில்லி பாய், யோசி! ஒரு நல்லா ஐடியா கிடைக்கும்" என அப்பாவும் கூறியது, 'உன் ப்ராப்ளத்தை நீயே சால்வ் பண்ணிக்கோ' என்பதை சொல்லாமல் சொல்லியதுபோல் இருந்தாலும், ஒரு விதத்தில் 'இது ஒன்னும் நீ நினைக்கிறது போல் கவலை படும்படியானதொரு விஷயமும் இல்லை. உன்னால் முடியும்!' என்று நம்பிக்கை தரும் விதமாகவும் அமைந்து என்னை சகஜ நிலைக்கு மாற்றியது.

நான் கேட்ட வார்த்தை மாயாஜாலத்தின் விளைவாக தெளிவுற்று எனது தேவையை பற்றி மட்டும் முழுமையாக யோசனை செய்யத்துவங்கினேன். சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது தாத்தா பரிசாக கொடுத்த 'புத்தகம்'. " இது அசாதாரனமான அபூர்வமான ஒன்று. உன் ஆசைகள் - நிழலாக இருந்தாலும் சரி கனவாக இருந்தாலும் சரி, இதில் சேகரித்து வைத்து தேவைப்படும் போது நிஜமாக மாற்றிக்கொள்ளலாம். தக்க சமயத்தில் இது உனக்கு துணை புரியும்" என்ற அவரது வாழ்த்துக்கள் இன்று உண்மையாகவிருப்பது த்ரில் கலந்த சஸ்பென்ஸ்ஸான சூழ்நிலையை உருவாக்கியது.

கொஞ்சம் விருவிருப்புடனும் பரபரப்புடனும் என்னுடைய அறையை புரட்டிப்போட்டு தேடியபோது, கப்போர்டின் மேல் அடுக்கில்,அழகாக கிப்டு பேப்பர் சுற்றிய அட்டைப்பெட்டியினுள் இருந்து, சிப்பிக்குள் இருக்கும் முத்தை தேடி எடுப்பதை போல் அந்த புத்தகத்தை தேடி எடுத்தேன். ஒரு விதத்தில் மட்டுமல்ல எல்லா விதத்திலும் இந்த புத்தகம் முத்தை விடவும் விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக மாறக் காத்திருந்தது .

காலையிலிருந்து என்னை துளைத்துக் கொண்டிருந்த கேள்விக்கான சரியான விடை இதுவன்றி வேறொன்றுமில்லை. வகுப்பறையில் "அன்றாடம் இயற்கையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக பிற்காலத்தில் மனித சமுதாயத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகவும், உலக அழிவிற்கு வித்தாகவும் அமையக்கூடும். அப்படியிருக்க இன்றைக்கு உள்ள நிலையிலாவது இயற்கையை பாதுகாத்து வருக்காலத்தினருக்கு ஒப்படைக்க ஒவ்வருவரும் என்ன செய்ய போகிறீர்கள்? புதுமையான அதே நேரம் செயல் படுத்தகூடியதுமான ஒரு விடை தான் எனது எதிர்பார்ப்பு" என ஆசிரியர் எழுப்பிய புதிருக்கு பதில் என் கைக்குள் இருந்தது.

இந்த புத்தகத்தை இருக்க அணைத்தவாறு, முதலில், இயற்கையின் எந்த பகுதியை பாதுகாக்க வேண்டும் என்ற கேள்விக்குறியுடன் ஜன்னலிலிருந்து வெளியே பார்த்த நொடியில் புலப்பட்ட நிஜம் - இரவு நேரத்தை குறிக்கும் கரிய நிறம், மேக கூட்டத்தினுள் தனது பாதி முகத்தை மறைத்து மீதி முகம் தெரியும் படி என்னை பார்த்து சிரித்த நிலாப் பெண், வானமெங்கும் சிதறிக்கிடந்து கண்சிமிட்டும் நச்தத்திரங்கள் - இந்த மூவர் கூட்டணி கொள்ளைகொள்ளாத மனமே இருக்க முடியாது. ஆதலால் முதல் பாதுகாப்பு இவற்றிற்கே.

மெதுவாக ஜன்னலின் வெளியே கையை மேல் நோக்கி நீட்டி இரவின் இருளை கை நிறைய அள்ளி சிந்தாமல் சிதறாமல் புத்தகத்தின் முதல் பக்கம் முழுவதும் தடவினேன். பின்னர், ஒரு கண் மூடி, இரு விரலை விரித்து, நிலவை அளவெடுத்தேன். விரலுக்குள் அடங்கிய நிலவை பத்திரமாக வானிலிருந்து பிரித்து எடுத்து பக்கத்தின் நடுவே ஒட்டினேன். அடுத்ததாக முடிந்த அளவு இரு கைகளிலும் நச்சத்திரங்களை அள்ளி, தனித்திருந்த நிலவுக்குத் துணையாக பக்கம் முழுதும் தூவி முடித்து பார்த்த பொழுது, சற்று முன் வெளியே தூரத்தில் தெரிந்த இரவு வானத்தை விட தற்போது கையிலிருந்த இரவு மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்ததை நம்ப முடியாமல், வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தேன்.

எனது ரசனை என்னும் தெளிந்த நீரோட்டத்தில் கல் எரிந்து கவனச்சிதறல் என்னும் நீரலைகளை உண்டாக்கியது, "ரித்து அங்கே என்ன செய்ற? இங்க ஒரு நிமிஷம் வந்து பாரேன்!" எனது அம்மாவின் பாசமான குரல். கீழே இறங்கி, சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் ஓடிய நான் நின்றது எங்கள் வீட்டின் பால்கனியில். அம்மா அப்பா இருவரும் வியந்து பேசி ரசத்துக்கொண்டிருந்தது நான் பார்த்து மகிழ்ந்த அதே காட்சியை தான்! "என்றுமில்லாமல் இன்று நிலா சற்று பெரியதாகவும் பிரகாசமாகவும் இருக்கிறது!", "என்ன காரணம்னு தெரியல ஆனால் பார்பதற்கு ரொம்ப ரொம்ப அழகாக, பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல உள்ளது" மாறி மாறி நிலவிற்கு புகழாரம் சூட்டிய தருணத்தில் கரண்ட் கட் ஆக, அந்த நிமிடம் எங்கள் அனைவரின் ரசனைக்கு மேலும் மெருகேற்றியது.

"இப்போ நாம சேர்ந்து ஒரு போட்டோ எடுத்தா எப்படி இருக்கும்?" அம்மா கேட்க, "செம ஐடியா! ரித்விக், கெட் மீ தி டிஜி கேம்" அப்பா சொல்ல, இப்படியொரு சந்தர்பத்தை மிஸ் பண்ண விரும்பாத நானும் விரைந்து சென்று கேமராவுடன் திரும்பினேன். சிரமப்பட்டு செட்டிங்க்ஸ் எல்லாம் மாற்றி - 'டே லைட் மோட்', 'ஆட்டோ க்ளிக்' என பலவற்றை அட்ஜஸ்ட் செய்து கரெக்டான ஆங்கிள்ல போகஸ் செட் செய்துவிட்டு வந்து என்னுடனும் அம்மாவுடனும் நின்றுகொண்டார் அப்பா. அவர்கள் இருவரும் அருகருகே நிற்க, அவர்களுக்கு முன் நின்ற எனது கழுத்தை சுற்றி தனது இரு கைகளையும் கோர்த்து தனது பக்கம் சிறிது இழுத்த அம்மாவின் செய்கையை பார்த்த அப்பா என் தோள் மீது ஒரு கையும் அம்மாவின் தோள் மீது ஒரு கையும் வைத்து அணைத்துக் கொண்டார். சமயோஜிதமாக செயல்பட்ட நடவடிக்கைக்காக அம்மாவும் அப்பாவும் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்க, இந்த ஆர்பாட்டத்தை பார்த்து பின்னயிலிருந்த நிலவும் சிரிக்க, நான் மட்டும் கையிலுருந்த பொக்கிஷம் தெரியும்படி கேமராவை நோக்கி கண்ணடித்து, 'தம்ப்ஸ் அப்' போஸ் காட்டி புன்னகைத்தேன். இது தான் பெர்பெக்ட்டான டைமிங் என்ன தனக்குத்தானே முடிவெடுத்த கேமராவும் சரியாக அந்த நொடியில் போட்டோவை பதிவு செய்தது.

அம்மாவும் அப்பாவும் நிலவை நோக்கி தங்களின் வர்ணனயை தொடர்ந்தவாரே எடுத்த நிழற்படத்தை ரசித்துக்கொண்டிருக்க, நானோ பொக்கிஷத்தின் முதல் பக்கத்திலிருந்த நிஜமான படத்தை ரசிக்கலானேன். இதே போல் வருக்காலத்தினரும் இயற்கையை மாசில்லாமல் ரசிக்க வழிவகுத்ததை எண்ணி மெய் சிலிர்த்தேன்!

!!!---!!!

Thursday, May 31, 2012

பிறந்தநாள் பரிசு


பிறந்தநாள் பரிசு


காலேஜ் போற நேரத்தைவிட காபி ஷாப்ல தான் அதிக நேரம் இருப்பாங்க இந்த கேங். என்ஜாய் பண்றதுக்கு ஏத்த சரியான இடம். எப்பவும் கிளாஸ் முடிஞ்சதும் அங்க தான் மீட்டிங். ஆனா இன்னைக்கு ஒரு ஸ்பெஷலான டே. கேங்ல ஒருத்தருக்கு பிறந்த நாள்னா சும்மாவா? அதனால இன்னைக்கு ஒரு நாள் கிளாஸ்ஸே அங்கதான்!

கேங் நேம் : குறிப்பிட்டு சொல்றதுக்கு எதுவும் இல்ல. ஆளாளுக்கு எப்படி எல்லாம் தோணுதோ அதுக்கு ஏத்த மாதிரி ஒரு பேர் வச்சு கூப்டுக்குவாங்க. கேங் மெம்பெர்ஸ் : இது ரொம்ப முக்கியம்! ஆகாஷ், வருண், சூர்யா, சந்துரு, தரணி என்ற ஐவர் பட்டாளம் பிளஸ் வசுந்தரா, மஹினா,ஹிரா, நிலா என்று மொத்தம் ஒன்பது பேர் கொண்ட கூட்டணி, கொஞ்சம் பெரிய கேங் தான்!

"யாராவது அவன பாத்தீங்களா?" காபி ஷாப்பில் உள்ளே என்டர் ஆகும் போதே கேட்டது வருணின் குரல்.

"யார பத்தி கேக்குற?" பதில் வசுந்திரா விடமிருந்து, காபியை குடித்து முடித்து விட்டு மெதுவாக கேட்டாள். மற்ற ஆறு பெரும் வருண்னை கண்டும் காணமல் காபியின் சுவையில் மூழ்கியிருந்தனர். பக்கத்தில் வேறு ஒரு கப்பில் 'கோல்ட் காபி' இருந்ததற்கான சுவடே இல்லாமல் கப் காலியாக இருந்தது. அது நம்ம ஹீரோ ஆகாஷ் அருந்தியதே.

"வேற யாரு? நமக்கெல்லாம் இன்னைக்கு ட்ரீட் வைக்கப்போரவனதான் தேடிட்டு இருக்கேன். எங்க போனானே தெரியல, கண்ணுலயே படாம சுத்திட்டு இருக்கான்!" வருண்.

"இவ்ளோ நேரம் இங்க தான் இருந்தான். இப்போ தான் எல்லாரையும் நைட் பார்ட்டிக்கு வீட்டுக்கு வரச்சொல்லிட்டு கிளம்பிட்டான்." நிலா .

"ஓ! அதுக்குள்ள எஸ்கேப்பா! அவன வீட்ல போய பாத்துக்கலாம்." சொல்லிட்டு கிளம்பிய வருனிடம், மஹினா "நாங்களும் கிளம்புறோம், கிப்டு வாங்கனும். ஸோ லெட்ஸ் ஆல் மீட் அகேயன் அட் ஆகாஷ்'ஸ் ஹோம் டுனைட்" கூறி விடை பெற்றது கேல்ஸ் கேங்.

டி-ஷர்ட், ஐ கியர், வாட்ச் என ஆளுக்கொரு கிப்டு செலக்ட் செய்து கொண்டிருக்கும் போது தற்செயலாக வந்த காலேஜ் ஜூனியர் ஷிவ்யா, "யாருக்கு கிப்டு? யாருடைய ட்ரீட்? டின்னர் எங்க?" என அவர்களின் உரையாடலை கேட்டு கேள்விகளை அடுக்கினாள்.

ஹிரா "இன்னைக்கு ஆகாஷுக்கு பெர்த்டே. ஸோ நைட் பார்ட்டி அவன் வீட்ல. டின்னர் அண்ட் ட்ரீட்டும் அவனுடையதே." என்ற பதிலுக்கு எதிர் கேள்வி "யாரு ஆகாஷ் ?!? உங்க பிரண்டா?" ஷிவ்யாவிடமிருந்து.

இதை சற்றும் எதிர்பாராத மஹினா "ஆகாஷ உனக்கு தெருஞ்சுருக்க சான்சே இல்ல, பட் அவனுக்கு உன்ன கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்! ஹி இஸ் மை பிரண்ட், கிளாஸ் மேட். ஆல்சோ யுவர் சீனியர்" நடந்துகொண்டே விளக்கத்தை தொடர்ந்தாள்.

"உயரமா ஆறு அடிக்கு கொஞ்சம் கம்மியா, அதற்கேத்த வெய்ட்டோட, கலையான முகம் அதுல இந்த நைட் நேரத்திலையும் 'சன் கிளாசோட', காதுல 'வயர்லஸ் எம். பி. பிளேயர்', லெப்ட் ஹேண்ட்ல 'பாஸ்ட்டிராக்', ரைட்ஹேண்ட்ல 'பிளாக்பெர்ரி' , புல்லா கலர்புல் காஸ்டியும்ல, எப்பவும் யாரையாவது கிண்டல் பண்ணிட்டு, வாய் மூடாம எதாவது பேசிட்டு, ரொம்ப எனர்ஜெடிக்கா கொஞ்சம் டேலன்ட்டடா, நிறைய பாய் பிரண்ட்சும் அதவிட நிறைய கேர்ள் பிரண்ட்ஸ் சுத்தி இருப்பாங்க, அவங்களோட சேந்து லைப்ப நல்லா என்ஜாய் பன்னுரவந்தான் ஆகாஷ் ... இப்போ எதாவது க்லூ கிடைச்சதா? நீ கண்டிப்பா பாத்திருப்ப " என நிலா முடிக்கும் முன் அவனது வீட்டிற்கு வந்துசேர்ந்திருந்தனர்.

அதே நேரத்தில் மற்ற நண்பர்களும் அங்கு வர "வா, ஆகாஷிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு போகலாம்" என்று ஷிவ்யாவை வசுந்திரா அழைக்க, அனைவரும் ஒன்றாக உள்ளே நுழைந்தனர். வீடு முழுவதும் தேடியும் எங்கும் நம்ம பர்த்டே பாய்யை காணவில்லை. நேராக படி ஏறி மேலே சென்றால், அங்கே இரவின் குளுமையான தென்றலை தனிமையில் சங்கீதத்துடன் ரசித்துக்கொண்டிருந்தான்.

நண்பர்களை பார்த்ததும் "ஹாய் மச்சி.. வாங்கடா.." வரவேற்றவன் அவர்களின் பின்னே வந்த ஷிவ்யாவை பார்த்ததும் "ஹாய் ஷிவ்யா! என்ன இங்க?" என்றதும் அனைவரும் ஒரே கோரசாக 'ஓ' போட்டு ஒருவரை ஒருவர் பார்த்து குறும்பு புன்னகையை பரிமாறிக்கொண்டனர். "உங்களுக்கு வாழ்த்து சொல்லத்தான் வந்தேன்" என்ற ஷிவ்யாவிற்கு சிரம் தாழ்த்தி கை விரித்து தன் பாணியில் நன்றி கூறினான்.

சிறிது நேரம் அனைவரும் ஆகாஷை கலாய்த்து முடித்தவுடன் சூர்யா, சந்துரு, தரணி அண்ட் வருண் வாங்கி வந்த கேக்கை கட் பண்ணிய ஆகஷிற்கு பர்த்டே சாங் பாடினர் வசுந்திரா, மஹினா,ஹிரா, நிலா. பர்ஸ்ட் கேக் பீஸ், ஸ்பெஷல் கெஸ்ட் ஷிவ்யவிற்கு என்றதும் மீண்டும் ஒரு கோரஸ் 'ஓ' வானை பிளந்தது! அடுத்த வினாடி கேக் வெட்டியதற்கான அடையாளம் அனைவரின் முகத்திலிருந்த கிரீம் மாஸ்க்லிருந்தும் தரையெங்கும் சிதறிக்கிடந்த கேக் துண்டுகளிலிருந்தும் மட்டுமே புலப்பட்டது.

கலகலப்பான பர்த்டே பார்ட்டியின் அடுத்த கட்டம் கிப்ட்டிங் செஷன். கிப்டை கொடுத்து முடிக்கும் முன் அவை அனைத்தையும் பிரித்துப்பார்பதற்கு இருந்த ஆர்வமிகுதியினால் களேபரமே அரங்கேறியது. இதற்கிடையில் போட்டோ செஷனும் ஒருபுறம் தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. க்ளிக்கியவற்றுள் ஷ்பெஷலானது சில : அதிசயமாக தனிமையில் இசையை ரசித்துக்கொண்டிருந்த ஆகாஷின் ஸ்நாப், ஷிவ்யாவிற்கு ஸ்டைலாக நன்றி கூறியபோது எடுத்த ஆகாஷின் போஸ் , கேக் வாங்கி வெட்டியதற்கு ஆதாரமாக புல் கேக் வித் கேண்டில்ஸ்ல கெடச்ச ஒரே ஒரு ஸ்நாப், ஒவ்வொருத்தரின் கிரீம் பேசியல் ஸ்நாப், கிப்டு கேளரியின் பின்னணியில் ஆகாஷின் க்ளோசப் புன்னகை ஸ்நாப் என லிஸ்ட் நீண்டு கொண்டே போக ஸ்பெஷல் கெஸ்ட்டான ஷிவயாவுடன் ஆகாஷ் பிடிவாதமாக சேர்ந்து நின்று எடுத்த போட்டோதான் ஹைலைட்டான பெர்பார்மன்சே.

நெக்ஸ்டு, டிரீட்டுக்கு ரெடியான அனைவரும் சேர்ந்து ஹோட்டலில் ரூப் கார்டனில் ரிசர்வ் செய்திருந்த டேபிளுக்கு சென்று ஆளுக்கொரு மெனு ஆர்டர் செய்து சாப்பிட்டு முடிப்பதற்குள் ஹோட்டலையும் ரெண்டு பண்ணிவிட்டனர். "கஷ்ட காலம்" என நொந்து கொண்ட வெய்டரிடம் "இதெல்லாம் சகஜம். என்ஜாய்மென்ட் கொஞ்சம் ஓவர்ராயடுச்சு. நீங்க கண்டுக்காதீங்க ப்ரதர். இதோ இப்போ கிளம்பிடுறோம்" என சமாளித்து எஸ்கேப் ஆவதற்குள் ஆகாஷிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

சங்கத்தை உடனே கலைக்க மனமில்லாமல் ஹோட்டலின் வெளியே இருந்த பார்க்கில் அமர்ந்து பேச முடிவெடுத்தனர். சூர்யா,"மச்சி! ரொம்ப நாளைக்கு அப்புறம் வி ஹேடு ஃபன் அஸ் எ கேங் டுகெதர் டா!" என ஆரம்பித்து அவரவர்களோட என்ஜாய்மென்ட் பீலிங்க்ஸ் எல்லாம் கொட்டி தீர்த்துவிட்டு, காபி ஷாப்பில் ஜாலியாக ஆரம்பித்த இந்த இனிய நாளை ஹாப்பி என்டிங்காக பார்க்கில் முடிவுக்கு கொண்டுவர ஆயத்தமாகினர். "ஓகே பார்ட்டி அட்டென்ட் பண்ண டயர்டுல நாளைக்கு கிளாஸ கட் பண்ணாம எல்லாரும் வந்து சேருங்க. அங்க மீட் பண்ணலாம்'' தரணி கூற மீண்டும் ஒரு முறை பிறந்தநாள் வாழ்த்தை ஆகாஷிற்கு உரித்தாக்கிவிட்டு அனைவரும் கிளம்பினர்.

ஆகாஷ் வீடு திரும்பும் வழியிலிருந்த ஏரியில் எப்போதும் சிறிது நேரம் செலவிடுவது வழக்கம். இன்றும் அங்கு சென்று அமர்ந்து தன்னுடைய இந்த நாளை பற்றிய நினைவுகளை அசைபோட்டான். எதிர்பார்த்துக்கொண்டிருந்த தருணத்தில் "பீப்" ஒலி கேட்டதும் மொபைலை எடுத்துப் பார்த்தவன் புன்னகையுடன் "ஹவ் வாஸ் யுவர் பர்த்டே" என்ற மெசேஜுக்கு "ஹேடு ஃபன் ஆல் தி டே வித் ஃப்ரெண்ட்ஸ். பட் தி மோஸ்ட் எக்ஸ்சைடிங் மொமென்ட் வாஸ் இன் தி நூன், வென் ஐ வெண்ட் டு குருகுலம் அண்ட் மெட் லிட்டில் கிட்ஸ் அண்ட் காட் தெயர் விஷ்சஸ். ஆல்சோ ஐ பாட் எ டிரஸ் ஆப் மை சாய்ஸ் அண்ட் பிரசென்ட்டெட் டு ஓனே ஆப் தி கிட் ஹு ஷேர்ஸ் ஹிஸ் பர்த்டே வித் மைன் டுடே! இட் வாஸ் ரியல்லி கிரேட் அண்ட் தேங்க்ஸ் பார் யூ ஹோல் ஹார்டேட்லி ஹு ஹேடு பீன் தி பிரைன் பிஹைன்டு தீஸ் லவுலி பீலிங் விச் ஐ வில் ரிஜாயஸ் பாரெவர்!" என்ற நீண்ட ரிப்லைக்கு " தட் இஸ் ஓகே. நத்திங் டு மென்சன் ஸோ மச். பர்த்டே விஷ்ஷஸ் ஓன்ஸ் அகைன். குட் நைட் :) " என்ற அடுத்த வந்த பதில் மெசேஜுக்கு "குட் நைட்" என்று அனுப்பிவிட்டு, தான் அளித்த பிறந்தநாள் பரிசினால் கிடைத்த புது அனுபவம் இந்த பிறந்த நாளை என்றென்றும் மறக்க முடியாததாக்கிவிட்டதை நினைத்து மகிழ்ந்தவாரே அவ்விடத்தை விட்டு நகரத் தொடங்கினான்.


!!!---!!!

Monday, May 14, 2012

Diary

Diary

Geetha, at the age of 10 now, taking her mom's advice seriously started blurting out every day's experience, day in and day out with her characteristic sweet words. It was perfectly an exuberant and indulgent activity setting her unloosen from the worries due to her parents not being around for company.

Parents of Geetha, Ravi and Menaka, had their own commitments right ahead of them spending only minimum time with their little daughter. Serving in a nation's army is definitely a demanding task to attend to naturally, that too from a far away place, masking the soft spot towards family adding to his woes. Meanwhile, Menaka who is doing busy, balancing between her chores and job, finds it extremely tough to counter to her kid's needs.

Apart from the only misery of missing her dad too long, Geetha grow up to be an active kid excelling in every other activities. She has sorted out several activities to stay off home and to put off her loneliness in every possible way by indulging in painting, dancing, vocal and keyboard class making her time at home very meagre. While her stay at home means the whole lot between her and her personal record. Since it is the only way to vent her feelings, she loved it the most as it not only helped her to escape from that single resentment but also made her lively, creating a sensation of sharing matters to her parents personally.

The war field environment as always has been a hardship for Ravi but for recently it has had tormenting effect while the issue prevailing at Sri Lanka struck him thoroughly. The day to day news updates about the same is startling and made him heavy hearted in knowing about the dreadful end that is forced upon all those innocent men and women. He is completely wretched on the thought of fatal death of sinless little kids, which at once sent a flash waves of his daughter across his mind. He longed now, more than ever to see her at this very instant.

Cursing his situation of not able to do so, just made a call and talked over phone which turned his ill at ease into a great sort of relief. At once he set his mind to visit her soon during next vacation and till then he made effort to keep in touch through phone more often than before.

On the other side, Geetha rejoiced on hearing the assurance from her dad about his visit home as soon as possible. So she started updating her personal record. Seriously she jotted down most of her exciting experiences which she cherished and her dad missed, starting from - the little quarrel she had with mom in not letting her talk to him over phone for a long time, outing to nearby park with neighborhood friends, her birthday party, how she messed up in the process of helping mom cleaning home, Harry Potter movie at theatre with mom, school picnic to waterfalls, silly fight with her friends, first painting of a scenary, childish nuisance in the name of practicing singing loudly at home, poor marks in maths test and writing imposition, getting up late in the morning and missing school bus often to get a ride with mom to school, fun at Hindi coaching class, troubling mom to teach her chess, clash for TV remote in switching between cartoon and news channel, prize she received for the outstanding student of the year and lots of more and more enjoyable things. Along with this cute record, she did enclose a greeting and a personal letter to her dad which showed her love for him in the form of welcome note.

Her whole world seemed meaningful, the more and more she thought of meeting her dad and the efforts she took in preparing for the same. Being a maiden try she sought the help of her mom also in the attempt of making her diary in a ready to read format as it is supposed to be her gift for dad. Only by then Menaka realized the extremum effect their absence had left upon their daughter and how much she craved for parental care.

She felt remorsefully bitter when she considered how her playfully consoling words to her daughter, "Start writing diary - your record of daily experiences be it a cool or troublesome matter, so that u will get a chance to let your dad know all things about u and he will be much surprised when you show it!" made her so serious and how she has been badly missing him for so long.

From then onwards, together with Geetha, she too looked forward for Ravi's day at home. The fun they both had while enjoying their way up to that day entirely remained like a treasure and they cherished it to greater extent. She never thought that her daughter's memoir would turn into such sweetful memories. Finally the day has come and Menaka felt eased on hearing the door bell rang and even the more louder cry of her kid uttering "Welcome back daddy!".

!!!---!!!

Tuesday, February 28, 2012

நீலக்கண்கள்

நீலக்கண்கள்

லோரன்ஸ் தனது வேலை நேரம் முடிந்த அடுத்த வினாடி தனது வீட்டினுள் அவசரமாக நுழைந்தான். நெஞ்சம் படபடக்க தனது தொப்பியை கலைந்து காய்ச்சலுற்றுக் கிடக்கும் தனது மகன் ஆல்பெர்ட்டை காண விரைந்தான்.


தன் காதலியின் மறைவிற்குப் பிறகு, அவள் லோரன்ஸிற்காக விட்டுச்சென்ற ஒரே உறவு - ஆல்பெர்ட்


தன் காதலி, 'எமி'யின் மறைவிற்குப் பிறகு அடுத்தவினாடி வாழ காரணம் இல்லாமல் இருந்த லோரன்ஸிற்கு புதிய உலகமாய், புதிய உயிராய், புதிய வாழ்கையாய் கிடைத்தவன் ஆல்பெர்ட்.


ஆல்பெர்ட்டிற்கு வயது 7ஆகிறது. அவன் வளர வளர, அவன் உருவில் எமி அதிகம் தெரிந்தாள். எமியின் கடல் குடித்த நீலமான கண்களை அப்படியே பிரதியெடுத்து வைத்திருந்தான் ஆல்பெர்ட். அந்த நீலக்கண்கள் - லோரன்ஸிற்கு ஆயிரம் வருடம் வாழ்வதற்கான தெம்பையும், அர்த்தத்தையும் தந்தது.


ஆல்பெர்டிற்கு சிறு காய்ச்சல் வந்தாலும் நிலைகொள்ளாமல் பரிதவிப்பான் லோரன்ஸ். இன்று அவனுக்கு 105 டிகிரி காய்ச்சல். அதனால், இன்று முழுவதும் ஆல்பெர்ட்டுடன் இருந்துவிட முயற்சி செய்தான். இருந்தும் தலைமையின் கட்டாயத்தினால் அவன் விடுப்பு எடுக்கமுடியாமல், வேலையிலும் கவனம் செலுத்த இயலாமல் திண்டாடினான்.


அவன் சக ஊழியர்கள் கூட அடிக்கடி லோரன்ஸை இதற்காக கடிந்துகொள்வதுண்டு. “ஒரு குழந்தையின் மீது இத்தனை பாசம் வைப்பது என்றைக்குமே தவறு. எங்களுக்கும் குழந்தைகள் உண்டு. நாங்கள் உன்னைப் போலவா கவலைபட்டுக்கொள்கிறோம். நம்மைப் போன்ற ராணுவ வீரர்கள் இத்தனை இழகிய மனதுடன் இருப்பது பெரும் தவறு. உன் மனதை சற்று கடினமாக்கிக்கொள் லோரன்ஸ். அதுதான் எல்லோருக்கும் நல்லது.”


ஆனால் எத்தனை பேர் எத்தனை முறை சொன்னாலும் லோரன்ஸ் மாறுவதாக இல்லை. அவனது ஒரே உலகம் ஆல்பெர்ட் தான்.


காய்ச்சலால் உடல் வெளிரிப்போயிருந்த ஆல்பெர்ட்டை பார்த்தவுடன் லோரன்ஸ் அசைவில்லாமல், அந்த அறையின் நுழைவாயிலிலேயே நின்றுவிட்டான். அந்த சின்ன நீல விழிகளில் ஆல்பெர்ட் அவனை பார்த்ததில், தன்னையறியாமல் கண்கள் கலங்கிவிட்டான்.


அவனருகில் சென்று அவன் முடியைக் கோதி, அவன் நெற்றியில் முத்தமிடும் போது, அவன் இதழ்களில் உஷ்ணம் படர்ந்தது.


தனக்கு தெரிந்த அத்தனை மருத்துவத்தை செயல்முறை படுத்தியும் காய்ச்சல் குறையவில்லை.


ஆல்பெர்ட்டின் பார்வை தூரம் போகப்போக லோரன்ஸின் இதயம் கனமேறியது. இரவு நெருங்குகிறது.


இனியும் தாமதிக்காமல் தன் மகனை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடிவெடுத்தான்.


'எத்தனை தொலைவாய் இருந்தால் என்ன? எத்தனை குளிராய் இருந்தால் என்ன? என் மகனைவிட எதுவும் எனக்கு பெரிதல்ல' என்று ஆல்பெர்ட்டை ஒரு போர்வையில் சுற்றி, தன் கையில் ஏந்தியபடி தெருக்களில் ஓடினான் லோரன்ஸ்.


ஊர் எல்லையில் இருந்த மருத்துவரின் வீட்டை நெருங்கும் போது மணி 9 ஆகிவிட்டது. ஆனால் சிறிதும் காத்திராமல், மருத்துவரை துரிதப்படுத்தி தன் மகனை காப்பாற்றிவிட்டான் லோரன்ஸ்.


மருத்துவர் கூட, “என்ன இது லோரன்ஸ். சாதாரன காய்ச்சலுக்கப் போய் இத்தனை ஆர்ப்பாட்டமா? யாரிடமாவது காரை கடன் வாங்கி வந்திருக்கலாமே. நீ கேட்டால் கொடுக்காமலா போவார்கள். இருந்தாலும் நீ உன் மகனிடம் கொண்ட பாசம் அதீதமானது. ஆபத்தாகக் கூட மாறலாம்.” என்று எச்சரித்து, ஆல்பெர்ட்டுக்கு தேவையான அத்தனை மருந்துகளையும் தந்து, தன் காரிலே லோரன்ஸை வீட்டிற்கு கொண்டு சேர்த்தார்.


அன்று இரவு முழுவதும் ஆல்பெர்ட்டை தன் மார்பிலேயே கிடத்தி, அவன் மீது கொண்ட பாசம், அவனது வருங்காலத்தை பற்றிய சிந்தனைகளிலேயே தூங்கிப்போனான் லோரன்ஸ்.


'ஒரு குழந்தை தான் ஒருவனது வாழ்வில் எத்தனை அதிசயங்களை ஏற்படுத்திவிடுகிறது '




றுநாள் காலை, புத்துயிர் பெற்ற ஆல்பெர்ட்டின் உச்சியில் முத்தமிட்டு, அவனை பள்ளியின் வகுப்பறை வரை சென்று விட்டுவிட்டு மீண்டும் கலங்கிய கண்களுடன் தனது ராணுவதளத்திற்குச் சென்றான் லோரன்ஸ்.


தனது துப்பாக்கியை சரிபார்த்துக் கொண்டிருந்த லோரன்ஸ் ஒரு தனி அறைக்கு வரவழைக்கப்பட்டான்.


லோரன்ஸின் முன் சில குழந்தைகள் நின்றிருந்தார்கள்.


“என்ன பார்க்கிறாய் லோரன்ஸ்? இந்த யூத குழந்தைகளையெல்லாம் கொல்லும்படி 'ஃப்யூரர்' உத்தரவிட்டிருக்கிறார். ஃப்யூரரின் உத்தரவு...இம்..யோசிக்காமல் சுடு!”


நடுங்கிய கைகளுடன் தன் துப்பாக்கி எடுத்து குறிபார்த்த லோரன்ஸை, மூன்றாவது நின்றிருந்த  யூத சிறுமியின் நீலக்கண்கள் சுட்டெரித்தது. 



----xxx----

HEAVEN OR HELL ?

HEAVEN OR HELL ?

Am slightly doubtful as how far this will turn out to be a victorious concept, but rather confident that something will be perceived only if tried for and cannot predict the result even before attempting it. Henceforth, I have been set all the way to plunge into action, making myself ready for the electrifying trial.

---

It was like as though I opened my eyes in the midst of deep meditation or a nightmare, surrounded by darkness and utter chaos, without a small clue of where am I present exactly. Am completely worn out, aged and this seemed to have occurred in no time.

Not sure whether it is the land or air, dream or reality and also couldn't make out whether am awake or asleep, in solitude or in crowd. Everything around created a brand new fresh feeling to sense! Unable to resist this weird experience, tried to get up and walk but with each step I took forward, things around moved front too. It took little time to realize that am going backward with every move made, which is contrary in nature.

Excitement along with wonder urged to know "Where the hell am I ?!?"

It wasn't the hell actually but an intuition prompted me this is going to be better in one way and worse in another way! Slowly dim light rays emerged from above while am on the move still, creating partial gloomy and cloudy sensation enabling to see through fractionally.

Suddenly from nowhere thousands of people approached me from opposite direction, chanting my name and showering their wishes at me. The whole area appeared to be filled with ecstasy, happiness and all sort of exaltation of spirit inducing one to be overjoyed.

Thrill increased with the reason for celebration not known. I endured a state of bewilderment yet enjoyed to the core being the center of attraction for such a massive merrymaking.

Then I observed a strange recurring thing. In all the directions my eyes gazed, there were shining flickering hoardings bearing felicitation for the achievement I have done. This also made me exhilarated as it seemed to be visible only for me since none other took notice of it, adding to the obscure situation prevailing.

Bypassing the throng am set anew to undergo next odd state. Here I saw enormously large buildings that constituted a city like impression. The facade of all edifice are more or less similar with infinite storied structure making impossible to know about the exact number of floors. My marching continued till am awestruck with the exquisiteness of one particular apartment which also attracted me with a profound familiarity.

Automatically I tend to explore that apartment which had splendid interiors rather than its exterior work. Each and every room bore the resemblance of research related place and has got one lengthy peculiar name inscribed on a hanging nameplate put in front of it, marking an identity. One such name caused me to come to a stand still and it was none other than my own name!

The unraveling mystery continued. "What is my part in such a vague spot?", question stimulated my sleeping mind to carve an answer for all the haphazard events occurring yet it rested again in vain since a conclusion could not be drawn.

Unable to resist this any further, entered and made a clear study of that room and also saw a random blurred visual in an enlarged screen in which I was seen working with a group of scientists showing series of images of Planets in varied angles, Satellites and telescopes of variety of shapes and structures and lot more theories and photos that remained connected to Solar system, Star system, Cosmos or Galaxy but didn't get a clear concept. Shock waves ran down through my spinal since the visual was played in a reverse order from the end to the beginning.

Exhausted of the same intolerable events I forced myself to move out of the place immediately in order to have a breath of fresh air. Next step waited ahead right in front of me making me to realize the fact that am not entirely out of the prevailing disorientation.

The shimmering miraculous daze made me to ramble and came to a halt by falling to the ground. Strained myself to return back to normal, wherein the existing dim light faded away little by little and vanished once for all leaving behind me in loneliness again.

---

Once when regained consciousness I found myself sitting in a dark room. After tedious attempt finally am able to pinpoint the issue behind the incoherent happening. But the task said to be accomplished is not in any way a cakewalk.

Being a scientist it had been my sought after wish to bring about a change in the normal working principle of living. For this purpose tried a concept only after retrieving myself out of my memory and experimenting with a most often demanded concept by people. They wish, Life would have been best if it provides us with a rewind or fast forward option, unknowing of the deadly consequences its hiding within it.

Trapped by the plot I tried for the same and now have landed in a turmoil. I have been undertaking a research to reinvent the universal rules to attain a complete solution for compensating the left of 3 days in February, 29 days occurring every 4 years else ending up with 28 days as the least.

The point to be noted is following the experimenting phase am now in a crucial situation to obtain a solution compulsorily which is damn sure to happen in future at any cost, as I have seen the after effects of it. For the same, suffering am yet to endure to bring it into real world concept will be horrible, dreadful, terrible or whatever worst it will be.

Be it a heaven or hell, I don't care for it in a range of bit or byte and I swear to pack up my research forever and move for dinner now!

!!!---!!!

Saturday, February 18, 2012

மதிப்பு


மதிப்பு

"திரு. மாதவன் ராவ்இரண்டு கோடியே நாற்பது லட்சம். மேலும் ஏலம் கேட்பவர்கள் கேட்கலாம்!”"

மூன்று முறை மணி ஒலிப்பியபின் அந்த ஓவியத்தின் ஏலம் முடிவுக்கு வந்தது.மாதவன் ராவின் செக்ரட்டரி நிருபமா, தன் பையில் இருந்த காசோலையை பூர்த்தி செய்யத்தொடங்கினாள்.

"உங்க பாஸ் ரொம்ப லக்கி மேடம். ஓவியர் செழியனோட பெயிண்டிங் கிடைக்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும்.”"

"உண்மையாகத்தான். இந்த பெயிண்ட்டிங், எங்க பாஸ் பல நாள் ஆசைபட்ட ஒன்னு. அதனால் தான் அவர் தினமும் இங்கு வந்து அந்த பெயிண்டிங்கை பல மணிநேரம் பார்த்துக்கொண்டிருந்தார். லகில் இருக்கும் அத்தனை இம்ப்ரெஸனிஸ்டோட பெயிண்டிங்கையும் சேகரிக்கறதுதான் எங்க பாஸோட மிகப் பெரிய லட்சியம். அதுக்கு அவர் எத்தனை கோடியையும் செலவு செய்வார்."

"மேடம். ஒரு சின்ன வேண்டுகோள்.”"

"சொல்லுங்க"

"ஓவியர் செழியனுக்கு எங்க சபா சார்பில் ஒரு விழா எடுக்கிறதா முடிவு செய்திருக்கோம். அது வைரக்கும்  இந்த பெயிண்டிங்  இங்கு  இருந்தால் நல்லா  இருக்கும். கொஞ்சம் தயவு பண்ணி...."

"என்னால எதுவும் இப்போ சொல்ல முடியாது சார். இதில் எங்க பாஸ்தான் முடிவு சொல்லனும். நான் எதற்கும் உங்களுக்காக பேசி பார்கிறேன்.”"

"நல்லது மேடம்."

காசோலையை சபா செக்ரட்டரியிடம் கொடுத்துவிட்டு, பெயிண்டிங்கிற்கான உரிம்மப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு  விடைபெற்றாள் நிருபமா.



மறுநாள்.

"ஹலோ! எம்.எஃப்.எஸ் சபா?"

"ஆமாம். நீங்க?"

மறுமுனையில் தொடர்ந்தாள் நிருபமா. "நான் மிஸ்டர்.மாதவன் ராவோட செக்ரெட்டரி பேசறேன்.”"

"சொல்லுங்க மேடம். ங்க போன் காலைத்தான் எதிர்பார்த்து இருந்தோம். சார் என்ன சொன்னாருங்க?"

"சார் சம்மதிச்சுட்டார். னால், எந்த டேட் வரை பெயிண்டிங் உங்களுக்குத்  தேவைபடும்னு தெரியனும்!"

"வருகிற 27ஆம் தேதி மாலை விழா வச்சிருக்கோம்மறுநாள் காலையே நீங்க எடுத்துகலாம்.”"

"சரி. னால் பெயிண்டிங்க்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்கனும். ங்க பாஸ் அந்த பெயிண்டிங்கை அவர் உயிரைவிட மேலாக பார்கிறார். அதனால், பெயிண்டிங்க்கு ஒரு சிறு பாதிப்பு வந்தால் கூட, உங்க சபா பெரிய விலைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்”"

"பெயிண்டிங் எங்கள் பொறுப்பு மேடம்.   ஓவியத்தோட மதிப்பு தெரிஞ்சவங்க நாங்க. அதனால் முழு பாதுகாப்போட இருக்கும்.”"

"நல்லது."”

"மேலும் ஒரு சின்ன  வேண்டுகோள் மேடம். விழாவிற்கு மாதவன் சாரும் வந்தா நல்லா இருக்கும்.  ஓவியத்தோட உரிமையாளர் என்பதைத் தாண்டி, இம்ப்ரெஸனிசத்தை உண்மையா ரசிக்கிற  ரசிகர். அதனால் அவர் வந்தால், இந்த விழா இன்னும் சிறப்பா இருக்கும்னு சபா சார்பா கேட்டுகறோம்."”

“"ஒரு நிமிடம். நான் பாஸிடம் கேட்டுட்டு சொல்றேன்”"

சிறிது நேரம் கழித்து..” "மன்னிக்கவும், பாஸ்   27ஆம் தேதி ஒரு முக்கியமானதொழில்சங்க சந்திப்பில் கலந்துகொள்ளவேண்டி உள்ளது.  அதனால் அவர் வரமுடியாது. இருந்தாலும், பாஸ் சார்பில், ஒரு பாராட்டு கடிதம் உங்களை வந்து சேரும் என தெரிவிக்கச்சென்னார்.”"



27ஆம் தேதி மாலை விழா நிறைவு கட்டத்தை எட்டியிருந்தது.

ஓவியத்தின் முன் சிறிய மேடை அமைத்து, கலைத்துறை அமைச்சர், சபா   நிர்வாகிகள் மத்தியில் செழியன் அமர்ந்திருந்தார். செழியனின்  கனிவான முகத்தில், மெளிதாக கோபம் தலைகாட்டியிருந்ததை யாரும் கவனிக்க தவறவில்லை.

"உலகில் பிசாரோ போல், மோனே போல், சிஸ்லி போல் இம்ப்ரெஸனிசத்தில் நம் நாட்டிலும் ஒரு உலகத்தர கலைஞன் இருப்பது நம் எல்லோருக்கும் பெருமை.. நன்றி  திரு.செழியன் அவர்களே. கடந்த ஐம்பது நாட்கள் தங்களது ஓவியத்தை எங்கள் சபாவில் கொண்டதற்காகவும், தங்களது   வருகையினாலும்  நாங்கள்  மிகவும் பெருமை அடைகிறோம். மீண்டும் ங்களுக்கு....”"

முடிவுரையை முழுவதும் கேட்காமலும் கூட செழியன் மேடையைவிட்டு வெளியேறினார். அவர் முகத்தில் இருந்த கோபம் விஸ்வரூபம் எடுத்திருந்தது. னால் காரணம் தான் ஒருவருக்கும் புரியவில்லை.

விரைவாக அவரை பின் தொடர்ந்து அவர் காரினுள் ஏறும் போது காரணத்தை பணிவுடன் வினவினார் சபா செக்ரெட்டரி.

செழியன் இறுதியாக வாய்திறந்து, "யோவ். ஐம்பது நாளா என்னத்தையா கிழிச்சீங்க? ஒருத்தனுக்கு கூடவா என் பெயிண்டிங் தலைகீழா மாட்டியிருந்தது தெரியலை?”."

செக்ரெட்டரியின் மன்னிப்பிற்கு காத்திராமல் செழியனின் கார், தெரு எல்லையை சென்று மறைந்தது.



---முற்றும்---