பித்தனின் வரிகள்.....
அன்பின் அணுவே,
ஆசையின் கருவே,
இன்பத்தின் இருப்பிடமே,
ஈருலகம் வெல்லும் வீரமே,
உருக்கையும் கரைப்பாய்,
ஊன்றுகோலாய் நிற்ப்பாய்,
எத்தனையோ விதம் உன்னில்,
ஏற்றோர்க்கு வாழ்வு இனிக்கும்,
ஐயமில்லா நீ இல்லை,
ஒரு உள்ளம் கானது,
ஓர் உலகம் போதாது,
ஒளடதம் நீயோ? அழுகின்ற மனதிற்கு,
அடி அடியில் அறிவு
சொன்னால் ஆத்திச்சூடி எனலாம்,
சொல்லத்தான் பொருளில்லை
பொருள் தரும் சொல்லில்லை
மனம் மேல் ஆசை வந்தால்
காதல் எனலாம்,
காதல் மேல் காதல் வந்தால்?
கிணற்றுத் தவளை
என்னுள்ளம் -கிண்ணத்து தேனில்
கிரங்கிய சிற்றெறும்பாய் மாற,
என் நிலை யாரிடம் கூற..?
பாட்டெழுத தெரியாது
பா விருத்தம் புரியாது
மனம் கண்டு மை கொண்ட
இவ் வரிகளுக்கு மண்ணவர்
தரும் பொருள் யாதோ?
-கி.ரஞ்சித் குமார்