Monday, February 27, 2012

270

270 


பூங்கா முழுவதும் சேரும் சகதியுமாக இருந்தது.

"என் அறுபது வருசத்துல நேத்து நைட் கொட்டின மழைமாதிரி பார்த்ததே இல்லை. அப்பப்பா! எப்படி ஒரு மின்னல்! எத்தனை பெரிய இடி!"

"ஆனால் உலகமே அழிந்தாழும், எனக்கு காலையில 5 மணிக்கெல்லாம் இங்க வாக்கிங் வரலைனா எனக்கு பொழுது விடியாது. யாருமே இல்லாத வேளையில், இந்த பூங்காவே எனக்கு சொந்தம் போல இருக்கும்."

அந்த பூங்காவின் மத்தியில் புதிதாக பெரிய குழி ஒன்று புகை மூட்டமாக இருந்தது.

"நேத்து நைட்டே நினைத்தேன். அத்தனை பெரிய இடி சத்தம்! அருகில் எங்கோ தான் இடி விழுந்திருக்க வேண்டும் என்று."

குழி அருகில் பல செடிகள் கருகிக்கிடந்தது. அதனருகே முதியவர் ஒருவர் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

அவர் பின்னால் சென்று, "இங்க இடி விழுந்ததை பாத்தீங்களா ஐயா?" என்று வினவினேன்.

அவர் தன்  தலையை மட்டும், சரியாக 270 டிகிரி திருப்பி, "ஆம்!" என்றார் என்றது.

----x----

1 comment:

  1. This sudden(science) fiction which seem to be a story now may nearly happen in future.

    Imagination together with the art of narration scores as always..!

    ReplyDelete