Saturday, June 18, 2011

Vimarsanangal


விமர்சனங்கள் .......!!!!

காதல் என்றாலே
காதை பொத்திக்கொள்ளும்
சமூகத்தில் கடவுளை
அடையும் வழி
அன்பென்று சொல்லாதீர்கள்.........
காதலில் ஒன்றுமே
அது நினைத்ததை
நடத்தி முடிக்கும்,
ஒருவகையில் காதலும்


கடவுளே.... காதல் என்னும் வார்த்தையை

நீங்கள் அனுபவிக்காதவரை
அதன் அர்த்தத்தை
யாரிடமும் கேட்காதீர்கள்...
காரணம்
அடி பட்டவனுக்கே
அதன் வலி தெரியும்
காதலில் புனிதமானது,
மோசமானது, என பல
வகைகள் இருக்கலாம்
அது
ஒரு ஓவியம் பார்ப்பவரின்
பார்வையை பொறுத்து
எண்ணங்கள் மாறுபடும் ....
காதலின் மீது வெறுப்பை
கொடுப்பது தவறான
புரிதலே.....
ஆனால்
காதலின் நண்பன் ,எதிரி
இரண்டும் காமமே........
காமத்தின் ஜன்னல் வழியே
காதலின் வீட்டை எட்டிப் பார்க்காதீர்கள்......
அங்கே நிர்வாணமாய்
இரு உடல்கள் மட்டுமே தெரியும்...
உள்ளத்தின் கண் கொண்டு
காதலைப் பாருங்கள்
உண்மை அன்பின் அர்த்தம் புரியும்.

கடைசியாக
சில வரிகள் காதலுக்காக......
காமமில்லா காதல்
பிரச்சாரம்....
காதலில்லா காமம்
விபச்சாரம்......

2 comments:

  1. கவிஞனுக்கு வார்த்தைகள் விழவேண்டும்!
    தேட கூடாது என்று வைரமுத்து சொன்னது போல
    வார்த்தைகள் விழுந்துள்ளது.

    காதலை பற்றி சொல்லும்போது தென்றலாக இல்லாமல்
    புயலாக இருக்கிறது!

    ReplyDelete
  2. "காமமில்லா காதல் பிரச்சாரம்! காதலில்லா காமம் விபச்சாரம்!" - இவ்விரண்டு வரிகள் பிரகாசம்.

    ஆனால் இந்த படைப்பை கவிதையா, கட்டுரையா என்று வேறுபடுத்தமுடியவில்லை!

    கவிதையெனில் வார்தை விரையம். கட்டுரையெனில் கருத்துப்புதுமையும் ஆழமும் தேவை.

    உங்களின் முந்தைய படைபுகளின் தரத்திற்கு இல்லை.

    ReplyDelete