Wednesday, September 14, 2011

பணக்காரன்!

பணக்காரன்!



ரெடாரென்டினுள் நுழைந்தான் தர்மா. மணி இரவு 8:30 என்று காட்டியபடி சுழன்றது கடிகாரமுள். "வெயிட்டர்" என்றழைத்து தனது டின்னருக்கான மெனுவை "ஒன் பர்கர் அண்ட் ஒன் மினி கோக்" என கூலாக ஆர்டர் செய்தான். எனினும் ஒருவித சலனத்துடன் அடிக்கடி பர்ஸை எடுப்பதும் பணத்தை எண்ணுவதுமாக இருந்தான்.


மெனு வந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் வெயிட்டரும் வந்தான் '48 ரூபாய்' பில்லுடன். எண்ணி சரியாக ரூபாய் எடுத்து வைத்துவிட்டு தன்னுடைய பைக்கில் விரைந்தான்.


புத்தகம்படிப்பதை பொழுதுபோக்காக கொண்டிருந்தவன்பக்கங்களின் இடையே சில்லறை காசை 'புக்மார்க்'காக வைக்கும் பழக்கமிருந்ததை நினைத்து பெருமிதம் கொண்டான். அப்படி அனைத்து புத்தகங்களிலிருந்தும் சிரமப்பட்டு தேடி எடுத்து வநதது தான் தற்போது கையிலிருந்த 49 ரூபாய்.


தெருக்கோடியை அடைந்தவுடன் செல்போன் சிணுங்கியது . மறுமுனையில் "இன்னைக்கு கோடி ரூபாய் மதிப்புள்ள அசெயின்மன்ட் ஒண்ணுல கையெழுத்து போட்டிருக்கேன். நீ சீக்கிரமா ஊருக்கு வந்திரு . நீதான் அதை பார்த்துக்கனும். அப்புறம் நீ கேட்ட பணத்தை இன்னைக்கு போட முடியல. நாளைக்கு காலைல பணம் உன் கையிலிருக்கும்". பதிலாக "சரிப்பா" என்ற ஒற்றை சொல்லுடன் தொடர்பை துண்டித்தவன் "அய்யா! தர்மம் பண்ணுங்க" என்னும் குரல் கேட்டு திரும்பினான்.


மீதமிருந்த ஒற்றை ரூபாய் நினைவுக்குவந்ததும் அதை எடுக்க பர்ஸை திறந்தவனை பார்த்து சிரித்தன உள்ளிருந்த நான்கைந்து .டி.எம் கார்டுகள். அதனை பொருட்படுத்தாது ஒற்றை ரூபாயை முதியவருக்கு கொடுத்துவிட்டு சிறு புன்னகையுடன் தெருக்கோடியை கடந்து இருப்பிடம் நோக்கி புறப்பட்டான்.



!!!---!!!








No comments:

Post a Comment