Friday, September 16, 2011

தலைமுறை தாண்டி...



தலைமுறை தாண்டி...

வயது ஐந்துக்கு மேல்,
அப்பா இழுத்துச் சென்றார்
கேட்காமலே கிடைத்தது
மிட்டாய் ,

கண்களில் பயம்
கண்ணீர் ஊற்றுடுக்க
அமர வைத்தார்கள்
பாசமாய் பேசி
தன் பணி முடித்தார்...

அந்த சவரத் தொழிலாளி....

வயது வாலிபம் ஆனது
பேஷன் தெரியாது என
அடுத்தக் கடைக்கு மாறினாலும்,
அந்த நாளின் பாசத்திற்காக
அவ்வபோது முகச் சவரம் மட்டும்...

இன்று என் மகன்
குழந்தையாக...

பேஷன் வேண்டாம்
அன்பான தொழிலாளி வேண்டும்
மீண்டும் என் பால்ய
சவரத் தொழிலாளி......

நாளை??

என் மகனும் இதே தான்

காலங்கள் கடந்தாலும்
தலைமுறை கடந்து
நிற்கிறார் அந்த

சவரத் தொழிலாளி.....

அவர்க்குத் துணையாக..

அந்த உடைந்த நாற்க்காலி....


-ரஞ்சித்குமார்






2 comments:

  1. சில வரிகளில்...
    இரண்டு தலைமுறை...
    ஆனால்
    ஒரே சவர தொழிலாளி....

    எளிமை...

    ReplyDelete
  2. என்றோ நினைவில் நின்றவை...!
    இன்று கவிதையாக...
    மீண்டும் நாளைய நினைவுகளை நோக்கி...!

    பாராட்டுகள்...

    ReplyDelete