Tuesday, July 12, 2011

The Name is Bond

சூப்பர் ஸ்டார்!


'அந்த ஏவுகனை, அதன் இலக்கான தீவிரவாத முகாமை தாக்க இன்னும் இரண்டு நிமிடங்கள் தான் உள்ளது.

அந்த நேரத்தில் தான் அங்கு இருந்த ஒரு அணு ஆயுதத்தை, ஏவுகனையை செலுத்திய இங்கிலாந்தின் ரகசிய உளவுப்படை கவனித்தது.

உடனடியாக ஏவுகனையை செயலிழக்கச்செய்ய உத்தரவிட்டனர். ஆனால், ஏவுகனை கட்டுப்பாட்டு எல்லையை கடந்துவிட்டது. அங்கிருக்கும் அணு ஆயுதம் வெடித்தால் அந்த நாடே சாம்பலாகிவிடும். அதைவிட முக்கியம், அங்கு இங்கிலாந்து ரகசிய உளவுப்படையின் முக்கியமான உளவாளி துப்புதுளக்கச் சென்றுள்ளான்!

ஏவுகனை இலக்கை தாக்க இன்னும் ஒரு நிமிடமே உள்ளது!

ரகசியப்படையின் அதிகாரிகள் எல்லோரும் அந்த உளவாளி இறந்துவிட்டான் என்று நினைக்கும் போது, அந்த உளவாளி, அந்த ஒரு நிமிடத்திற்குள் அந்த மொத்த தீவிரவாத முகாமையும், அங்கு இருக்கும் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளையும் அழித்துவிட்டு, அந்த அணு ஆயுதத்துடன் ஒரு விமானத்தில் பறந்து (இறுதி நொடியில்) தப்பித்துவிடுகிறான்.'

இந்த திரைக்கதையை உலக்கத்தில் இரண்டே நபரை வைத்துதான் படமாக்க முடியும்.

ஒருவர் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

மற்றொருவர் சந்தேகமேயில்லாமல் 'ஜேம்ஸ் பாண்ட் 007' தான்.


ஜேம்ஸ் பாண்ட் என்ற கற்பனை கதாபாத்திரம் 1952ல் 'இயன் ஃப்ளெம்மிங்'கால் உருவாக்கப்பட்டது.
Fleming's James Bond

உலக சினிமாவில் ஒரே கதாபாத்திரத்தை வைத்து அதிக தொடர் திரைப்படங்கள் எடுக்கப்பட்டது ஜேம்ஸ் பாண்ட் தான். மொத்தம் இதுவரை 22. (23வது படப்பிடிப்பில் உள்ளது)

இத்தனைக்கும் இயன் ஃப்ளெம்மிங், இந்த கதாபாத்திரத்தை வைத்து எழுதியது மொத்தம் 12 நாவல்களும், இரண்டு சிறுகதை தொகுப்புகள் மட்டுமே!

பத்திரிக்கையாளராக வேலைபார்த்து வந்த ஃப்ளெம்மிங், இரண்டு மாதம் விடுமுறைக்கு ஜமைக்காவிற்கு சென்றபோது உருவாக்கிய கதாபாத்திரம் தான் இந்த 'ஜேம்ஸ் பாண்ட்'.

ஃப்ளெம்மிங், “அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விலங்கியல் ஆராய்ச்சியாளரை மனதில்கொண்டு உருவாக்கிய கதாபாத்திரம் தான் ஜேம்ஸ் பாண்ட்” என்று கூறியுள்ளார். ஆனால், 'கொஞ்சம் கற்பனை ஊட்டப்பட்ட ஃப்ளெம்மிங் தான் ஜேம்ஸ் பாண்ட்.' என்பது பல விமர்சகர்களின் கருத்து. காரணம் ஃப்ளெமிங்கின் ஒரு நாள் வாழ்க்கை -

காலை (11 மணிக்கு) எழுந்தவுடன் ஜமைக்கா கடற்கரையில் ஜாக்கிங். அதன் பிறகு இரண்டு மணிநேரம் எழுதுவார். மதிய உணவிற்குப் பிறகு கலவி கலந்த குட்டித்தூக்கம். மாலையில் 'பார்டி', உணவு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் மீண்டும் கலவி கலந்த காதல். அதன் பிறகு சுருசுருப்பாக ஒரு மணிநேர எழுத்துடன் அந்த நாளை முடித்துக்கொள்வார். இப்படிப்பட்ட அனுபவத்தின் வெளிப்பாடுதான் நமது 'ஜேம்ஸ் பாண்ட்'

Ian Fleming
மேலும் ஃப்ளெம்மிங்கிற்கும் ஜேம்ஸ் பாண்டிற்கும் அதிக ஒற்றுமைகளை ஆராய்ச்சியாளர்கள் வரிசைபடுத்துகின்றனர். உதாரணமாக கப்பற்படையில் வேலை பார்த்தது, ஒரே உணவு பழக்கம், ஒரே ரசனை (பெண்கள் மீது!).

எல்லா படத்திலும் ஜேம்ஸ் பாண்ட் சராசரியாக ஒவ்வொரு 23.3 நிமிடத்திற்கு ஒரு முறை மது அருந்துவார் என்று கணக்கு போடும் அளவிற்கு ரசிகர்களும், உலகளவில் வேறு எந்த கதாபாத்திரத்திற்கும் இல்லாத எதிர்பார்ப்புகளும் இவருக்கு உண்டு.

'ஜேம்ஸ் பாண்'டின் 22 படங்களின் மொத்த வசூல் எத்தனை தெரியுமா?

$11,686,214,000 


லகத்தை காக்கும் 'ஜேம்ஸ் பாண்'டிற்கு என்றே பிரத்யேகமான பல அம்சங்கள் உண்டு.

Car - Aston Martin

Gun - German-made Walther PPK 

No - 007 ( '00' என்பது, இங்கிலாந்து உளவுப்படையான 'எம்.ஐ.6' துறையின் உயர் மட்டத்தில் இருக்கும் உளவாளிகளுக்கு கொடுக்கப்படும் அந்தஸ்து!)






Drink - Vodka Martini (Shaken, not Stirred)

Watch - Omega

Theme Music - Composed by Monty Norman

இது அனைத்தையும் விட பிரதானமானது, ஜேம்ஸ் பாண்ட் தன்னை அறிமுகப்படித்துக்கொள்ளும் வசனம் - 'The name is Bond, James Bond' 

'ஜேம்ஸ் பாண்'டின் கடைசி படமான 'க்வாண்டம் ஆஃப் சொலேஸ்' அதிகம் வெற்றியடையாததற்கு காரணம் இந்த பிரத்யேகங்கள் இல்லாததால் தான் என்கின்றனர் திரைப்பட விமர்சகர்கள்! அனால் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள 'Bond 23' படத்தின் மூலம் விட்ட பணத்தை வட்டியுடன் பெறுவோம் என்கிறார் தயாரிப்பாளர்.

Bond 23

எது எப்படியோ! சுருக்கமாக சொல்லப்போனால் ஜேம்ஸ் பாண்ட், ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்!

1 comment:

  1. BOND ROCKS!

    Cheering information about Flemming and his creation...

    ReplyDelete