Thursday, June 23, 2011

தோழர்கள்

நேரம் வந்துவிட்டது!

இரவு மணி 9.30. துள்ளி எழுந்து என் கடை கதவுகளை மூட ஆரம்பித்தேன். இனி கடைசி பேருந்தை பிடித்து 30 கி.மீ தொலைவில் உள்ள என் கிராமத்து வீட்டிற்கு செல்ல வேண்டும். நான்கு திங்களாக இதுவே வழக்கம் என்பதால் வாழ்க்கை சற்று வெறுப்பாக இருக்கிறது.

நேரம் நெருங்குவதால் குடி மக்களின் தாகம் தீர்க்க பச்சை கடையில் அலையடித்தது. அந்த வேடிக்கை எனக்கும் தாகத்தை உண்டாக்க , கூட்டத்தில் ஒருவனாய் ... தீர்த்தம் பெற்றேன் ( வென்றேன் ) . 


தீர்த்தத்தின் தாக்கத்தால் பேருந்தில் தள்ளி அமர்ந்தனர் எல்லோரும். என் நிறுத்தம்! பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டேன்.

என் தடத்தில் என்னை கண்ட நாய் ஒன்று தன் காதை விடைத்து எனக்கு எச்சரிக்கை செய்தது. ஏனோ அருகில் என்னை கண்ட அது இயல்பாக தன் குட்டிகளுடன் விளையாடத்துவங்கியது. துணை இன்றி நடக்கும் எனக்கு ஒரு வழி தோழன்.

என் பாதையில் ஒர் நூறு அடியில் மீண்டும் ஒரு எச்சரிக்கை!!

வெள்ளையாய் இரு பெண் பிம்பங்கள். நான் வெடவெடத்து அங்கேயே நின்றேன். எங்களுக்குள் இடைவேளை குறைய... அங்கே! மல்லிகை பூ... கால் கொழுசு... பெரிய பொட்டு... என்ற இலக்கணமில்லா ஒரு சுடிதார் பேயும் அதன் தோழி ஜீன்ஸ் பேயும்!

அவைகள் (அவர்கள்) தங்களுக்குள்,


"இவண்டி! இன்னிக்கும் லேட்டா வராண்டீ! ".

1 comment:

  1. Good Plot. Good attempt with the 'Comedy' Genre. would have been better if the story is in Short story format as it got much to explain.

    ReplyDelete