Wednesday, April 27, 2011

Pirates - Deep from the History

கடல் கொள்ளையர்

உலக சரித்திரத்தில் எந்த திசையைப் பார்த்தாலும் ஒரே ஒரு தரப்பினரின் பெயர்மட்டும் நீக்கமற நிரைந்துள்ளனர். அந்த தரப்பினர் - கடல்கொள்ளையர்கள்.

மனிதர்கள் கப்பலை வர்த்தகத்திற்கு பயன்படுத்த தொடங்கியவுடனே கடல்கொள்ளையர்களும் களத்தில் குதித்துவிட்டார்கள். கொள்ளையர்கள்என்பதற்காக இவர்களை கீழ்தரமாக எண்ணிவிடக்கூடாது. இவர்களுக்கென்று தனி கடற்பகுதி, தனிக் கொடி, தனி சட்டதிட்டங்கள் என தனி சாம்ராஜியத்தையே ஒவ்வொரு கொள்ளையர்களும் அமைத்திருந்தனர்.

ஆரம்பத்தில் நீர், உணவு, உடை என அத்தியாவசியங்களை திருடியவர்கள் பின் தங்கம் வைரத்துடன் நிற்காமல் மனிதர்களை கடத்தி பணையத்தொகை வசூலிக்கவும், அடிமையாக விற்கவும் ஆரம்பித்தார்கள்.

இப்படித்தான் கிமு முதலாம் நூற்றாண்டில் சில்சிய கடல்கொள்ளையர்கள் ஜூலியஸ் சீசரையே பணையக் கைதியாக கடத்தினார்கள். 'என்னதான் தான் கைதியென்றாலும், தனக்கு ராஜமரியாதை அளிக்கப்பட்டதாக' சீசரே தன் வாழ்கை வரலாற்றில் கூறுகிறார்.
கடற்கொள்ளையர்களுடன் சீசர்

ரோம் அரசாங்கத்திடம், சீசரை விடுவிக்க 20 கோப்பைகளில் தங்கக்காசுகள் கேட்கபட்டபோது, அது தன் தகுதிக்கு குறைவானது என்று கொள்ளையர்களை 50 கோப்பைகள் கேட்கச்சொன்னார் ஜூலியஸ். அப்படியே கேட்டு, அதனை அரசாங்கமும் கொடுத்து, சீசரை மீட்டது. சீசர் நாடுதிரும்பியவுடன் செய்த முதல் காரியம்.. பெரும் படையை அனுப்பி அத்தனை கொள்ளையர்களையும் பிடித்து கடற்கரையிலேயே சிலுவையில் அறைந்தார்.

க.கொள்ளையர்கள் ஒவ்வொருவரும் தமக்கென்று ஒரு கொடி வைத்திருந்தாலும் 'ஜாலி ரோகர்' (Jolly Roger) என்ற மண்டைவோடும் இரண்டு எலும்புகளும் பொருத்தப்பட்ட கொடியே பிரதானமாக கடல்கொள்ளையர்களுக்கு அமைந்துவிட்டது. (இந்த கொடியை பின் காமிக்ஸும் சினிமாவும்தான் அதிக பிரபலப்படுத்தியது.)
Jolly - Roger

மேலும் கடல்கொள்ளையர்கள் பெரும்பாலும் ஒற்றை கண்ணை கருப்பு துணி ஒன்றால் மறைத்துகட்டப்பட்டவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். இதற்கு உண்மையான காரணம் - க.கொள்ளையர்களின் உணவில் விட்டமின் 'C' குறைவாக இருந்ததனால் 'கிரிக்கட்' என்னும் நோய் ஏற்பட்டு தங்கள் ஒற்றை கண்ணை இழந்ததே!

மக்கள் ஹீரோவாக ஏற்றுக்கொண்ட பல க.கொள்ளையர்கள் சரித்திரத்தில் உண்டு. குறிப்பாக 'பிளாக்பியர்டு' (Blackbeard). நீண்டு தொங்கும் சுருள் தாடி, புகை வரும் குல்லாய் என ஒரு 'ஸ்டைல் ஐகா'னாக இருந்தவன் இந்த 'பிளாக்பியர்டு' (நிஜப்பெயர் - எட்வர்ட் டீச்). சக்கரை நோயால் தன் ஒற்றைகாலை இழந்து, இவன் கட்டைகால் பொருத்திக்கொள்ள, பின் வந்த பல கொள்ளையர் இந்த 'கட்டைகால் ஃபேஷனி'ல் மயங்கி தாங்களும் அதை பொருத்திக்கொண்டனர்.
Blackbeard

தொழில் ரீதியிலும் தனக்கென்று தனி வழியை கடைபிடித்தான் பிளாக். முதலில், அருகில் வரும் கப்பல் எந்த நாட்டுடையதென்று கண்டுபிடித்து அந்த நாட்டின் கொடியை தன் கப்பலில் பறக்கவிடுவான். அந்த கப்பல் நட்புறவாடி அருகில் வந்ததும் தன்னுடை நிஜக் கொடியை பறக்கச்செய்து அவர்களை பீதியடையச் செய்வான். அதன்பின் பெரும்பாலும் அனைத்து கப்பல்களும் இவனிடம் சரணடைந்துவிடும்.

பெண் க.கொள்ளையர்களும் சரித்திரத்தில் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டனர். சைனாவைச் சேர்ந்த ஷிங் ஷூ என்பவளிடம் மட்டும் 1800 கப்பல்கள் இருந்தது.

 ஏறத்தாழ அத்தனை க.கொள்ளை கூட்டமும் மறைமுகமாக ஏதோவொரு அரசாங்கத்தின் துணையுடன்தான் செயல்பட்டது என்பதை சரித்திரம் சுட்டிக்காட்டுகிறது. பிரான்ஸிஸ் டிரேக் என்னும் கடல் கொள்ளையன் முதலாம் எலிசபெத் ராணிக்கு இரண்டு கோடி மதிப்புள்ள தங்க நாணயங்களை (16ஆம் நூற்றாண்டு) மாமூலாக தந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கும் கம்போடியாவிலும் சொமாலியாவிலும் கடல் கொள்ளையர், நம் இந்திய கப்பல்கள் உட்பட பன்னாட்டு கப்பல்களை களவாடுவது வருத்தமான ஒரு நிகழும் சரித்திரம்.

2 comments:

  1. Interesting Fact!

    அறிவு கூர்மையும்...
    ஒழுக்கமும்...

    நல் வழியில் இருப்பவர்களில் விட
    இவர்களிடம் கற்று கொள்ளலாம்....

    வீரப்பன் போல!

    ReplyDelete
  2. Extremely different collections of information about an uncommon topic...

    Good to have got a chance to know all such details through 'Do u know'...

    Great try...

    ReplyDelete