ரசனை
“இது வெறும் நகல் தான். உண்மையான ஓவியத்தை நீ பார்த்ததுண்டா?” என்றது மஹதிக்கு பின்னால் இருந்து ஒரு குரல்.
இந்தியாபோன்றொரு நாட்டில் தன்னைத்தவிற எவருக்கும் கலைகளின் மீதும், காவியங்களின் மீதும் ரசனையில்லை என்று அவள் நினைத்திருந்தது எத்தனை தவறு என்று மஹதிக்கு புரிந்தது.
நாட்கள் செல்லச் செல்ல பத்மநாபனின் கலையார்வமும், ரசனையும் மஹதியை அதிகம் ஈர்த்துவிட்டது, இறுதியாக தன் ரசனைகளுக்கு ஏற்ப ஒரு சக ஜீவனை இந்த பூமியில் கண்டுபிடித்துவிட்டதாய் மஹதி உணர்ந்தாள். இந்த முதியவரின் நட்பு அவளுக்கு பரவசத்தை ஏற்படுத்தியது.
முற்றும்
மெட்ராஸ் ஆர்ட் மியூசியத்தின் வாசலில் மஹதியை இறக்கிவிட்டு, தனது பைக்கில் நின்றவாறே சோம்பல் முறித்தான் ஆதித்யா.
“நீ உள்ளே வரலை?”, மஹதி
“உள்ளே சொக்கா போடாதா பொண்ணுகளோட பெயிண்டிங்ஸ் இருக்குமா?” அசடு வழிய கேட்டான் ஆதித்யா.
“ஒழிஞ்சு போ!” பொய்யான கோபத்துடன் மியூசியத்துள் நுழைந்தாள் மஹதி.
இந்த உலகம், இந்த ஆதித்யா, இந்த காதல் என அனைத்தையும் மறந்து, மஹதி அந்த ஓவியத்தில் லயித்திருந்தாள்.

'கடவுள், மனிதனை படைத்ததற்கான உச்சக்கட்ட காரணம் - இந்த ஓவியம்'
அந்த மியூசியத்தில் பார்வையிட வந்த ஒவ்வொருவரும் நகர்ந்து கொண்டே செல்ல, கடந்த மூன்று மணி நேரமாக ஒரே ஓவியத்தில் தன் மனதை இழந்த மஹதி, உணர்ச்சியின் வெளிப்பாடாக, கண்ணில் நீர் ததும்ப “எத்தனை அழகு!” என்றாள்.
“இது வெறும் நகல் தான். உண்மையான ஓவியத்தை நீ பார்த்ததுண்டா?” என்றது மஹதிக்கு பின்னால் இருந்து ஒரு குரல்.
அவள் திடுக்கிட்டு பின்னால் திரும்பி பார்க்க, ஒரு மனிதர் 'டீ-ஷர்ட் ஷாட்'ஸுடன் புன்னகைத்தார். மனிதருக்கு அறுபது வயது இருக்கும். இல்லை இல்லை, ஒரு ஐம்பது?, நாற்பது? சரியாக சொல்லமுடியவில்லை.
மஹதி அவரை புரியாமல் விழிக்க, “இந்த ஓவியத்தோட ஒரிஜினல் காப்பி பார்த்திருக்கிறாயா?” என் மறுபடி வினவினார்.
இல்லையென்று தலையசைத்த மஹதியின் அருகில் வந்து, “நான் பார்த்திருக்கிறேன். நியூ யார்க் ஆர்ட் மியூசியத்தில். இட் வாஸ் ரியலி அமேசிங். வான்காவோட ஒவ்வொரு ஸ்ட்ரோக்கும் அப்பட்டமா தெரியும்.” என்று கண்ணாடி கண்களில் அந்த நகல் ஓவியத்தை மேலும் ஒருமுறை வருடினார்.
“ஆனால் என்னுடைய ஃபேவரைட், வான்காவோட 'கஃபே டெரேஸ்'தான். அதை பார்பதற்காகவே நெதர்லாந்து போயிருந்தேன். அதனுடைய ஒரு காப்பிகூட இங்க இருக்கு. பார்த்திருக்கியா?”
மீன்டும் இல்லையென்று தலையசைத்த மஹதியின் கைகளை பற்றி அவளை அடுத்த அறைக்கு இழுத்துச் செல்லும்போது மஹதி செய்வதறியாது திகைத்திருந்தாள்.
எந்த ஒரு சக இளைஞன் கூட தன்னிடம் இத்தனை உரிமை எடுத்துக்கொண்டதில்லை. தன்னைவிட வயதில் பல மடங்கு மூத்த ஒரு மனிதர், தன் கைகளைப் பற்றி, இத்தனை உரிமையுடன் இழுத்துச் செல்வது மஹதிக்கு ஆச்சரியமாக இருந்தது.
மஹதி, அந்த மனிதரிடம் இறுதியாக வாய்திறந்து பேசுவதற்குள் அவர்கள் அந்த புதிய ஓவியத்தின் முன் நின்றிருந்தனர்.
“லுக் அட் திஸ் பெய்ண்டிங், யங் லேடி! இம்ப்ரெஸனிஸத்தோட உச்சக்கட்டம். கீழே இருக்கும் தரையில், வெளிச்சத்தின் பிரதிபளிப்பை பார். இந்த மனிதர்களைப் பார். இந்த மாதிரி ஓவியங்களை அங்குளம் அங்குளமாக ரசிக்கனும். அப்பதான புரியும்! ”
தன் ஓவியப் பேராசிரியர் கூட ஒரு ஓவியத்தை இத்தனை ரசிப்பாரா என்று மஹதி வியந்தாள். இவர் கண்களில் எத்தனை வியப்பு! அவளுக்கு இந்த புது மனிதரை பிடிக்கத்தொடங்கிவிட்டது.
மாலை நான்கு மணிக்கு, அந்த மியூசியத்தின் வாசலில், மஹதி “சார், எனக்கு ஆச்சரிமா இருக்கு. உங்களுக்கு எப்படி பெயிண்டிங்ஸ் மேல இத்தனை ஈர்ப்பு? நம்ம ஊர்ல இப்படி ஒரு ஆளா?”
“எனக்கும் ஆச்சர்யம் தான். கடைசியா எனக்கு இந்த ஓவியங்களை பத்தி மனசுவிட்டு பேச ஒரு ஆளு கிடச்சதுக்கு. அதுவும் ஒரு அழகான பெண்!”
மஹதி சின்ன புன்னகையுடன் அவரிடமிருந்து விடைபெறும் வேளையில், “சார், அடுத்து உங்களை எப்போ பார்க்கலாம்?”
“நாளை மாலை! சாந்திபவனில்! 'ஃபிலிம் ஃபெஸ்டிவளில்'!” என்றார் பத்மநாபன் என்று இப்போது பெயர் தெரிந்துவிட்ட அந்த மனிதர்.
மறுநாள் இரவு, படம் பார்த்துவிட்டு எல்லோரும் வீடு திரும்பும் நேரத்தில்,
“போன வருஷம், இங்க ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்தேன். 'தி எனிமி'ன்னு. இன்னும் மனசுக்குள்ளயே நிக்குது. படத்தோட கேமரா மேனை கட்டிபிடிச்சு வாழ்த்தலாம் போல இருந்தது”
“போன வருஷம், இங்க ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்தேன். 'தி எனிமி'ன்னு. இன்னும் மனசுக்குள்ளயே நிக்குது. படத்தோட கேமரா மேனை கட்டிபிடிச்சு வாழ்த்தலாம் போல இருந்தது”
இந்தியாபோன்றொரு நாட்டில் தன்னைத்தவிற எவருக்கும் கலைகளின் மீதும், காவியங்களின் மீதும் ரசனையில்லை என்று அவள் நினைத்திருந்தது எத்தனை தவறு என்று மஹதிக்கு புரிந்தது.
நாட்கள் செல்லச் செல்ல பத்மநாபனின் கலையார்வமும், ரசனையும் மஹதியை அதிகம் ஈர்த்துவிட்டது, இறுதியாக தன் ரசனைகளுக்கு ஏற்ப ஒரு சக ஜீவனை இந்த பூமியில் கண்டுபிடித்துவிட்டதாய் மஹதி உணர்ந்தாள். இந்த முதியவரின் நட்பு அவளுக்கு பரவசத்தை ஏற்படுத்தியது.
தினமும் மஹதி பத்மநாபனை சந்தித்தாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலை பற்றி விவாதித்தார்கள். ஒரு நாள் ஹம்மிங் பறவை, மற்றொரு நாள் 'ஹிட்லர் - ஈவா பிரான்' என உலகின் அத்தனை விஷயங்களையும் பற்றி பேசி சிலாகித்தாற்கள்.
பத்மநாபனை பார்க்காத நேரங்களை நொந்துகொண்டாள்.
ஒரே மாதிரியான ரசனை. ஒரு பெண் எதிர் பார்க்கும் மென்மை, பக்குவம், என தனக்கு இந்த உலகத்தில் ஏற்ற துணை இவர்தானோ என நினைத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக மஹதி பத்மநாபன் மேல் காதல் கொண்டாள்.
தன் தந்தையை விட வயது மூத்தவராக இருப்பாரோ? இருந்தும் வயது ஒரு பொருட்டில்லை என்று தனனைத்தானே சமாதானமும் செய்துகொண்டாள்.

ஒரு நாள், இத்தாலிய உணவகத்தில் 'பாஸ்தா'வின் வரலாற்றை பற்றி பத்மநாபன் கூறுவதை ரசித்து கேட்டுக்கொண்டிருந்தாள்.
தன் காதலை அவரிடம் சொல்ல சரியான தருணத்தை தேடிக்கொண்டிருந்த நேரத்தில் மஹதியின் செல்போன் சினுங்கியது .
பலமுறை அழைப்பை துண்டித்தும், மீண்டும் மீண்டும் கத்தியது அந்த செல்போன். இறுதியாக பேசினாள்.
“ஆதித்யா, நான் இங்கு முக்கியமான வேலையாக இருக்கிறேன்! தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதே.”
“ஆனால் நான் உன்னிடம் ஒரு வாரமாக பேச முயற்சி செய்கிறேன். என்ன ஆச்சு உனக்கு. என்னை மறந்துட்டாயா?”
“நான் உன்னிடம் பேசும் சூழ்நிலையில் இல்லை”
“என்னை மறந்துட்டாயா? இல்லை பிடிக்கலையா?”
எதிரில் அமர்ந்த பத்மநாபன் தன்னை உற்று கவணிப்பதை உணர்ந்த மஹதி, மேற்கொண்டு எதுவும் பேசாமல் செல்போனை 'ஆஃப்' செய்துவிட்டு, “என் நண்பன். பணம் கடனா கேட்டு தொல்லை செய்கிறான்.”
பத்மநாபன் புன்னகைத்தார்.

அதே நாள் இரவு. பத்மநாபன் தன் அறையில், கையில் விஸ்கியுடன் அமர்ந்திருந்தார்.
“இதுக்குபோய் கவலை படலாமா. நான் அப்பவே சொன்னேன். இந்த மாதிரி பொண்ணுகளை எல்லாம் நம்பமுடியாதுன்னு. இப்பயாவது உனக்கு புரிஞ்சதே! அதுவுமில்லாமல், இந்த பெயிண்டிங், ஃபோட்டோகிராபி, குச்சுப்புடின்னு சுத்தற பொண்ணெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராது. நம்ம ஜட்ஜ் ரவிசங்கருக்கு ஒரு பொண்ணு இருக்காள், ஸ்ருதின்னு. நல்ல அழகு, நிறைய பணம். நம்ம குடும்பத்துக்கு தகுந்த பொண்ணு. நாளைக்கு போய் அவளை மீட்பண்ணு. சரியா?”
தன் தந்தையின் வார்த்தைகளை அமைதியாக ஏற்றுக்கொண்டான் ஆதித்யா.
தன் தந்தையின் வார்த்தைகளை அமைதியாக ஏற்றுக்கொண்டான் ஆதித்யா.
முற்றும்
Antagonistic approach handled to make two beloved hearts fall apart...
ReplyDeleteUnjustness caused to 'mahathi' evokes sympathy and crooked behavior of a dad provokes outrage which indirectly gains praise for description...
On the whole 'rasanai' turned out to be vanishing factor of love life...