நம்ம குடும்பம்
“நான் சொன்னால் புரிஞ்சுக்கோ அருண். நான் ஒன்னும் காதலுக்கு எதிரியில்லை. ஆனால் அந்த மகாவும் அவள் குடும்பமும் நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராதுடா!”
தன் மகனின் அருகில் அமர்ந்து எடுத்துக்கூறினார் சிவசங்கரன்.
“அவள் வசதியெல்லாம் நம்மளவுக்கு இல்லைங்கிறது கூட எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் அந்த பொண்ணோட குடும்பம்தான் அவ்வளவு சரியில்லை அருண். அவளோட அம்மாவுக்கு மாசம் பொறந்தா ஒரு புது படத்துக்குப் போகனும். அவள் அப்பனுக்கு ஊருபூறாம் கடன். அவள் அக்கா, ஏதோ கால்செண்டர்ல வேலைன்னு ராத்திரியெல்லாம் வீடு தங்க மாட்டேங்கிறாள். அவள் அண்ணன் ஒரு கீழ்சாதிப் பொண்ண கல்யாணம் பண்ணியிருக்கான். இந்த குடும்பம் நம்மளுக்கு ஒத்துவராது அருண். நம்ம குடும்பத்துக்குன்னு ஊருக்குள்ள ஒரு பேர் இருக்குடா!”
சிவசங்கரன் தன் மகனிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர் அருகில் வந்து நின்ற வெய்டரிடம்,
“எனக்கு ஒரு சுமால் ரம்மும், மகனுக்கு ஒர் லார்ஜ் வோட்காவும் தாங்க. மிக்ஸிங்க்கு சோடா கொண்டுவாங்க” என்று ஆர்டர் செய்துவிட்டு,
“ஏன் அருண், உனக்கு மிக்ஸிங்க்கு சோடா ஓ.கே தான?”
----x----
A real time life issue...
ReplyDeleteFake reason to reject a girl and a very strong place to convince that boy?!?
Romba nalla (namma) kudumbam!
Maha Escape Ahita!!!
ReplyDelete