Friday, March 25, 2011

இலக்கணம்

இலக்கணம்


காலை துயில் எழுந்து
கலைந்த கூந்தல்தனை
அள்ளிமுடிந்து
கொள்ளையின்
கேணித் தண்ணீர்
வாசல் தெளித்து

அன்னமாய் அரிசி மாவுதனை
கோலமிட்டு அடுக்களை வேலையினை
அடுக்கடுக்காய் அரங்கேற்றி
அந்தி சாயும் வேளையிலும்;
முந்தி இருப்பாள் வேலையிலும்;
இதுவே பெண் என்றும் ,
அவள் இலக்கணம் என்றும்
எண்ணியிருந்தேன்.................!



மாற்றம்.......



கைப்பேசி காதல் இசையில்
கண்விழித்து
தட்டி எழுப்பினாள்(ல்)
பயனில்லை.......




அவன் கைப்பேசிக்கு
ஒரு மிஸ்டு கால்
மின்னலாய் எழுந்தான்
மின்சாரக் கணவன்....

அடைமழையாய் அரங்கேறின
அடுக்களை பணிகள்
அரை நாழியில் ;

காலை எட்டு மணி
மின்சார ரயில்ஏறி
சம்சாரம் சென்றுவிட்டாள்.......




மாலை எட்டு மணி
அதே மின்சார ரயில்
சம்சாரக் குயில்.......

இரவு உணவு
இரண்டு பொட்டலம்,
பிரித்து உண்டார்கள்
சிர்த்து கொண்டே
ஒலித்தது கடிகாரம்
இரவு பதினோரு மணி......



சிக்னலாய் சிரிப்பு
சிக்கனமாய் பார்வை..
கண்களில் உறக்கம்
கனவிலே வாழ்க்கை....




என இலக்கணமும்
இல்லாக் கனவானது ..........???????

1 comment:

  1. நவீன யுக இலக்கணம்
    நாள் தோரும்
    இல்லங்களில் நிகழும் இலக்கியம்...

    Its all just a change in the change demanding lifestyle:)...

    ReplyDelete