Wednesday, December 26, 2012

நிழல் யுத்தம்......

நிழல் யுத்தம்......

நான் 
நானாக இருக்க
நினைத்தேன்....

அரை கிலோ மிஞ்சிய 
ஒரு தக்காளி ஒதுக்கினேன் 
ஒரு மணி நேரம் 
ஓயாமல் திட்டு 
அம்மாவிடம்,

பார்த்து எழுதாமல் 
பத்து மதிப்பெண்,
உருப்படாதவன் பட்டம் 
அப்பாவிடம்,

தெரியாமல் எடுத்த 
சிகரெட்,
பணம் நீட்டினேன்
"உனக்கெல்லாம் 
கல்யாணம் ஆன மாதிரி தான் !"
இது நண்பன் ,

"பார்த்து எழுதினா 
சாமி கண்ணை குத்திவிடும்"
இது இரண்டாம் வகுப்பில் 
ஆசிரியர்,

"பார்த்து எழுதியாவது பாஸ் 
பண்ணுடா?"
இது இருபத்து இரண்டாம் 
வயதில் ஆசிரியர்,

நானாக இருக்க நினைக்கும்
எனக்கும்,
என்னை மாற்றும் சூழலுக்கும்,

இருந்துவரும்

நிழல் யுத்தம்


இவர்களாக நான்
மாறாதவரை.

ஓயப்போவது இல்லை...
                                                        கி.ரஞ்சித்குமார் 








2 comments:

  1. நிழல்யுத்தம் இன்று பலருக்கும் நிஜ வாழ்க்கை யுத்தமே!

    ReplyDelete