Thursday, March 10, 2011

Uyirillaa Varigal !!


உயிரில்லா வரிகள்....!!!!!!!

மயங்க வைப்பதனால்
தான்

பெண்(கள்) என

பெயரோ???

குழந்தை இல்லை,
கை
விட்டான்
கணவன்;

கைபிடித்தன
தினம் நூறு குழந்தைகள்
பள்ளியில் ஆயா வேலை.........!


மதுவிலக்கு கேட்கிறாள்
என்
இந்தியத் தமிழச்சி !
மாதத்திற்கே
விலக்கு கேட்கிறாள்
என்
ஈழத்து தமிழச்சி............!

தமிழன்
என்று
தலை நிமிர்ந்தான்
ஓங்கி
இடித்தது
முள்வேலி கூடாரம் ??????

உயிரையும்

விலையாய்

கொடுக்கிறேன்

நான் பெற்ற தாயின்

கருவறையில்

ஒரு கணம் தூங்க.......!

உப்பில்லாத உணவும்

அமிர்தமானது

அம்மாவின் அன்பில்......!

காதல்....

காதல்....
காதல்....
சொல்லும்போதே

போதை தலை சுற்றுகிறது.......!


சமூகத்தில்

பெண் மதிக்கப்பட

வேண்டுமா?
காதலை

கட்டாய

சட்டமாக்குங்கள் ......!


-ரஞ்சித்........!

2 comments:

  1. Nice Lines..

    தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
    இங்கமரர் சிறப்பு கண்டார் - பாரதி

    ReplyDelete
  2. உயிரில்லா வரிகள் என்று யார் சொன்னது???
    ஓவ்வொரு வரியும் உணர வைகின்றனவே!!!

    ReplyDelete