பேய் வீடு ?
ஃபாதர் ஸ்டீபனையே பார்த்துக்கொண்டிருந்தார்.
"ஏன் ஃபாதர், நம்ம கர்த்தர்னால கூட இந்த வீட்டுல இருக்கிற தீய சக்திகளை ஒன்னும் செய்யமுடியலையே. இந்த மாதிரி நேரத்துல எனக்கு நம்ம கடவுள் மேல இருக்கிற நம்பிக்கையே போயிடும் போல", ஸ்டீபன் மிகவும் விரக்தியுடன் பேசினான்.
"அப்படியெல்லாம் பேசாதே ஸ்டீபன். தெய்வம் நின்னு கொள்ளும்!. இந்த வீட்டுல இருக்கும் சாத்தான்கள், என் போன்ற மனிதனுக்கு கட்டுபடாமல் இருக்கலாம். ஆனால் தெய்வத்திற்கு கட்டுபட்டே ஆகனும். எதற்கும் நேரம் வரனும் இல்லையா? நீ எதற்கும் குழந்தைக்கு சரியாகும் வரை இந்த வீட்டை விட்டு வெளியே எங்காவது தங்கியிரு."
ஃபாதரின் அறிவுரையை ஏற்றான் ஸ்டீபன்.
அந்த வீட்டில் இருந்து வெளியே வந்த ஃபாதர் தன் செல்போனை எடுத்து ஒரு 'எஸ்.எம்.எஸ்'ஸை தட்டினார்.
'வீடூ இனி உங்களுடையது!'
பதில் 'எஸ்.எம்.எஸ்' வந்தது.
'பேசியபடி உங்கள் அக்கவுண்டில் பணம் தயாராக உள்ளது!'.
---x---
A clear picture of curse on this society and relevant effective bang against the same.
ReplyDeleteMost popular religious criminals. Nice 1.
ReplyDelete