Thursday, April 14, 2011

The Kiss


னிதனின் சாதனைகள் எல்லாத் துறைகளிலும் கடலென விரிந்துகொண்டிருக்கும் வேளையில்  சமீபத்தில் நான் கேள்விப்பட்ட ஒரு (உலக) சாதனை, என்னை வெகுவாக கவர்ந்தது.

அமெரிக்காவில் டேலி-கான்சியலோ ஜோடியின் 33 மணி நேர இடைவிடாத முத்தம் தான் அந்த மகத்தான சாதனை. 'எவ்வளவு மூச்சுப்பயிற்சி? எத்தனை கவனம்? எத்தனை சத்திழப்பு? எத்தனை உழைப்பு? அடேங்கப்பா!'
                               முத்தத் திருவிழா 

'அப்படி முத்தத்தில் என்னதான் இருக்கிறது' என்று கேட்டால், 'முத்தத்தில் என்ன இல்லை' என்று ஒட்டுமொத்த மனித கலாச்சாரங்களும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்புகிறது.மனித இனம் மட்டும்மல்ல, சிம்பன்ஸிகள் கூட தங்கள் கைகளை உயர்த்தி இதை ஆமோதிக்கிறது.

மனிதர்களைப் போலவே துணையின் முகம் பார்த்துப் புணரும் சிம்பன்ஸிகளில் கூட, ஆண் சிம்பன்ஸி வெளியே சென்று வீடு திரும்பும் போது, பெண் சிம்பன்ஸியை இறுக அனைத்து சிறிது நேரம் முத்தமிட்டுக் கழிக்கின்றன.


'முத்தமிடுவது உப்புத்தண்ணியை பருகுவது போல. பருக பருக தாகம் அதிகரிக்கும்' என்று ஒரு சீன பழமொழி உண்டு

னால், காதல் கலவியைத்தாண்டி ஆப்பிரிக்க பழங்குடியினர், தங்கள் கூட்டத்தின் தலைவன் நடந்து சென்ற இடத்தை முத்தமிட்டு, முத்தத்தை மரியாதை நிமித்தமாகவும் கடைபிடித்தனர்.

பண்டைய ரோமிலும், பேகன் கலாச்சாரத்திலும் கடவுளுக்கு 'ஃப்ளையிங் கிஸ்' கொடுத்து வழிபட்டார்கள்.

இனுயித்'களும் (எஸ்கிமோ) மலேசியர்களும்,  பாலினேசிய குடிமக்களும் (பசிபிக்தீவுகளில் ஒரு பகுதி- பாலினேசியா) அன்புடையவர்களின் மூக்கோடு மூக்கை உரசுவதை, முத்தமாக கருதுகிறார்கள்.

ப்லார்னி' என்னும் கல்லை முத்தமிட்டால் செய்யுங்காரியம் வெற்றியடையும் என்று அயர்லாந்தில் இன்றும் நம்பிக்கை உண்டு.


இப்படி உலகம் முழுவதும் ஒன்றாக முத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வேளையிலும், அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் மீசைவைத்தவர்கள் (எந்தவொரு சகமனிதருக்கும்) முத்தமிடுவது சட்டப்படிக்குற்றம்!

மேலும் கணக்டிகட் மாநிலத்தின் தலைநகரமான ஹார்ட்ஃபோர்டில், கணவன், மனைவிக்கு ஞாயிற்றுக்கிழமைகளில்    முத்தமிடக்கூடாது . இதுவும் அந்த மாநிலத்தின் சட்டம் !!


முத்தத்தை முதலில் எழுத்துக்களில் கொண்டுவந்த பெருமை இந்தியர்களையே சேரும்நான்கு வேதங்களிலும் முத்தத்தை பற்றிய குறிப்புகள் உண்டு. வாத்சாயனர் முத்தத்துக்கென்றே தனி அதிகாரம் படைத்து முத்தத்தை முப்பது வகையாக பிரித்திருக்கிறார்

னால் உலக புகழ்பெற்ற முத்தத்தை வழங்கிய நாடு ஃபிரான்ஸ் தான். 'ஃபிரென்ச் கிஸ்' - இதழோடு இதழ் இணையும் இந்த முத்தத்தைதான்  '‘ன்மாக்களின் பரிமாற்றம்' என்று உலக மக்கள் கருதுகின்றார்கள்.


சில அறிவியல் ஆய்வுகள்:

ஒரு நிமிட முத்தத்தில் 26 கலோரிகள் கரைகிறது. (இது ஐந்து நிமிட நடை பயிற்சிக்கு சமம்)

பிரென்ச் முத்தத்தில் நம் முகத்தில் உள்ள 34 சதைகள் பங்குகொள்கின்றனஇதனால் முகச்சுருக்கங்கள் வருவது குறையும் என்கிறது விஞ்ஞானம்.

நகக்கண்களை விட 100 மடங்கிற்கும் மேல் மனித உதடுகள் உணர்ச்சியுடையது. (இது நம் பால் உறுப்புகளின் உணர்ச்சிகளை விட அதிகம்!)

இருவர், இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடம் போது, அவர்களின் கொளுப்புச்சத்துபுரோடின் போன்றவற்றில் பரிமாற்றம் ஏற்பட்டு, அது அவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது! இது தெரியாமலா வள்ளுவர் "பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்" என்று பாடியிருப்பார்.

மேலும் ஒரு முக்கியமான தகவல் : 
முத்தமிடுபவர்கள் இருவருக்கும் வாயில் ரத்தகாயம் இல்லாதவரை முத்தமிடுவதால் உறுதியாக 'எயிட்ஸ்' பரவாது.

இந்த மொத்த தகவலையும்  எழுதுவதற்குள் மேலே சொல்லப்பட்ட உலக சாதனை, ஒரு தாய்லாந்து ஜோடியால் முறியடிக்கப்பட்டுவிட்டது.  

தற்போதைய சாதனை நேரம் - 46:24:09நீங்களும் முயற்சி செய்யலாம்!


1 comment:

  1. முத்தத்தைப் பற்றி எழுதி வரலாற்றில் இடம்பிடித்தது இந்தியர்களாய் இருந்தாலும்,
    முத்தத்தின் மொத்த வரலாற்றை எழுதிய தமிழனுக்கு எங்கே இடம் கொடுப்பதென்று தெரியவில்லை!

    மிகப்பெரிய ஆராய்சி!! மகத்தான கண்டுபிடிப்புகள்!!

    FINALLY SUCCEEDED IN UR 'HOT TOPIC' EFFORT!!!

    ReplyDelete