Friday, April 15, 2011

நானும்..! என் காதலியும்..!

நானும்..! என் காதலியும்..!


நான் அவளுக்காக காத்திருக்கிறேன்.

மாலை நேரம்... அவள் வருவதாக சொன்ன பூங்கா... இன்று என் காதலியிடம் என் காதலை சொல்லபோறேன்.

எங்கிட்ட ரோஜா இல்ல. க்ரிட்டிங் கார்டு கூட இல்ல. நம் பெண்களுக்கு கேட்பரி சாக்லேட் பிடிக்கும் என்பது பொது விதி. அவளுக்கும் பிடிக்கும். ஒரு 'கேட்பரி' யுடன் உட்கார்ந்திருக்கிறேன் அவள் வருகைக்காக... நானும் இந்த 'கேட்பரி' மட்டும் காத்திருக்கல... அந்த சைக்கிள் பழகும் குழந்தை, சென்ற கணம் இறந்து சாலையில் கிடக்கும் இந்த மஞ்சள் பூக்கள்.. வாழ்ந்து முடித்த வாக்கிங் தாத்தா.. ஏன்னா அவளை நான் மட்டும் ரசிக்கல. இங்க எல்லாம்.. ஏன் அவள பார்த்திருந்தால் நீங்களும் ஒரு கேட்பரியுடன் என் பக்கத்தில் உக்கார்ந்திருப்பீங்க. அவ அவ்வளவு அழகு.

பவித்ரா.. அவ பேரு. இரட்டை கோபுரத்தை இடிச்ச ஒசாமா கூட அவளை பார்த்தால் தாஜ்மஹால் கட்டுவான்!. அவ தான் அழகு.. அது தான் அழகு. அவ பின்னாடி வருபவர்கள் எங்கேயாவது இடிச்சுக்குவாங்க.. அது ஏன்னு அவ பின்னாடி நடந்த பிறகு தான் தெரிஞ்சுகிட்டேன். அவ கலரு ஆசையா இருக்கும். கண்ணு உருண்டையா இருக்கும். ஒரு அருவி பேசினா எப்படி இருக்கும்!.. அவ அப்படித்தான் பேசுவா.

அவள எனக்கு என் கல்லூரி ஆரம்ப நாட்க்களில் இருந்து தெரியும். இறுதி ஆண்டு இன்று வரை என் உயிர் தோழி அவள். உங்களுக்கு ஒன்னு தெரியுமா..அவளை கட்டிபிடுச்சுருக்கேன்... ஒன்னா பெட்ல தூங்கியிருக்கேன்... அவ உள்ளாடையை கூட என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியும்.. அவ்வளவு நெருக்கம் அவளிடம்.

அவ எப்போதும் சிரிச்சிட்டே இருப்பா. எப்போழுதாவது அழுவாள். கெட்ட வார்த்தை கூட பேசுவாள். அழகாக எழுதுவாள். அவ கூட இருந்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும் . அவ கூட இருந்து அவள காதலிக்கலைனா தான் அது ஆச்சரியம்.

இன்னிக்கு என் காதலை சொல்லனும்னு முடிவு பண்ணிட்டேன். இந்த காதலை சொல்லாம தூக்கத்தில் கனவு கூட வரமாடேங்குது. அவளிடம் எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனால் அவளது ஆடை கடந்த சுதந்திரம் வேண்டும். அவள் என் காதலியாக.!

இதோ அவ வரமாதிரி தெரியுது. அவ தான். தேவதையாய் வெள்ளை சுடிதாரில் வராலே! அவ தான் பவித்ரா. என் காதல் எதுவும் தெரியாமல் வரா சிரிச்சுக்கிட்டே. கொஞ்சம் பயமா இருக்கு. நானே என் காதலுக்கு தடையா இருக்கேனோ ?..

ஆம் நானும் ஒரு பெண் தானே!

Click here if you like this..

5 comments:

  1. Good Attempt. Good Flow and a Great Suspense.
    Simply Superb!

    ReplyDelete
  2. Natural love feel...

    Entirely unexpected twist in a single word of the last line...

    Overall, an enjoyable script...

    ReplyDelete
  3. must thank prasanna to let me know bout this one... good work mr.author... keep doin better ....

    ReplyDelete
  4. Kalakitta da thambi... idhu varaikkum oru nooru thadava padichiruppen... ovvoru thadavaiyume climax enna mei silirkka vaikkudhu... keep going...

    ReplyDelete