Friday, February 17, 2012

Sorry?!?

ஸாரி?!?



வாரத்தின் இறுதி நாள். மிஸ்டர் மேத்தா அன்றும், ஃபோனும் கையுமாக பிசியாக இருந்தாலும் உள்ளத்தின் பூரிப்பு முகமெங்கும் சிரிப்பாக வெளிப்பட்டது. "கண்டிப்பாக வந்துடனும். யெஸ், யெஸ். நாளைக்கு ஈவினிங்க் தான்" தன் நட்பு வட்டாரங்களுக்கும், தொழில் ரீதியான முகவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பர்சனலாக அழைப்பு விடுத்தார்.

சனிக்கிழமை மாலை 6 மணி - ஹோட்டல் 'ஸ்பெண்ட் பார்சியூன்.'

அனைவரையும் முன்னின்று இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார். இதனைப்போல பார்ட்டிகளெல்லாம் புதிதல்ல என்றாலும், என்றுமில்லாத மிதமிஞ்சிய மகிழ்சியுடன் மேத்தா காணப்பட்டதற்கு காரணம் தன் குடும்பத்துடன் நெடு நாட்களுக்குப்பிறகு நேரம் செலவிடமுடிந்ததும், அதற்கு வழிவகுத்த லாபகரமான தொழில்யுக்தியும் (' மேக்ஸிமம் பிராபிட் ஆப் தி குவார்டர்' ).

அனைவரின் பாராட்டுகளும், வாழ்த்துகளும் நிறைவை தந்த பொழுதும் கையில் வைத்திருந்த குவலையிலிருந்த அருமருந்தே மேலும் மனநிறைவை தருவதைப்போல் உணர்ந்தவர் விடாது தொடர்ந்தார் இரவு வரை.

மறுநாள். முன்தினம் வந்திருந்த அனைவரும், அதில் விட்டுப்போனவர்களும் கூட வந்திருந்தனர். சற்று மாறி இருந்தது இடமும் அவர்களின் உணர்ச்சியும் மட்டுமே.

ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி - ஹாஸ்பிட்டல் 'ரீகெயின் ஹெல்த்'.

ஒருவரது வரவுக்காக காத்திருந்த அனைவரும் தொலைவில் மற்றொருவரது முகம் பார்த்ததும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர். ஆனால் முகம் வாடிய நிலையில் வெள்ளை ஆடை அணிந்திருந்த அவர் சொன்னார் "லிவர் பெயிலியர். ஸாரி!"

யார் செய்ததற்கு யார் சொல்வது - "ஸாரி?!?"





!!!---!!!

2 comments:

  1. Perfect and very professional story telling....simply SUPERB !!!

    ReplyDelete
  2. Excellent! simple professionalism narration!

    ReplyDelete