அவளுக்குள் ஈரம்…….
பசுமைக்கூட்டமாம் என் இளமைத்தோட்டத்தில்
மோகப் புட்களும் முளைக்க,
தாகக் கொடியில்
காதல் மலர்களும் பூக்க:
அவள் கூந்தல்
கொடியில் சூடச்சொன்னேன்
என் காதல்மலரை
பொசுக்கி விட்டுச்சென்றாள்
அக்னிப் பார்வையில்;
பாலையாய் மாறினேன்:
ஏழையாய் ஏங்கினேன்:
அன்பு மழைக்காக
ஆண்டுகள் சில………
பருவநிலை மாற்றம்
அவள் பார்வையில் ஏற்றம்….?
பாறையா..?எனக் கேட்ட
அவள் உள்ளத்தில் சிறை வைத்து;
ஏனோ
காதல் ஊற்றும் கசிந்தது
அவளுக்குள் ஓரமாக……….
கல்லுக்குள் ஈரமாக…..
கி.ரஞ்சித் குமார்
ஆச்சரியப்படுவதில் அர்த்தம் ஒன்றும் இல்லை...
ReplyDelete'உன்னவளுக்குள் ஈரம்' - கவிதை முயற்சிக்கு கிடைத்த வெற்றி...