மம்பி
மேற்கு வங்கம், நாடியா மாவட்ட அரசு மருத்துவமனை. அவசர சிகிச்சை பிரிவு என பெங்காலியில் எழுதப்பட்ட அறை முன் ஏழ்மை படிந்த ஒரு குடும்பம் தன் மகள் மம்பி-யை எண்ணி கண்ணீருடன் காத்திருந்தது.
12 வயது சிறுமி மம்பி பூச்சிகொல்லி குடித்து தற்கொலைக்கு முயன்றதாக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தாள்.
கண்ணில் ஒன்றை இழந்த தந்தை மிர்துள் சர்க்காரும், சிறுநீரக குறைபாடு உள்ள சகோதரன் மனோஜித்திற்கும் மேலும் ஒரு இடியை தந்தது மம்பியின் தற்கொலை முயற்சி!
நொடிகள் கரைய... கரைய... செவிலிகளின் வாட்டமும்... டாக்டரின் அமைதியும் அக்குடும்பத்திற்கு மம்பியின் சாவை அப்பட்டமாக தெரிவித்தது. இயலாமையில் மிர்துள் தரையில் புரண்டு அழ ஆரம்பித்தான். மம்பி இழப்பை ஏற்க நேரம் தேவைப்பட்டது அவனுக்கு.
உடலை அங்கிருந்து கிடத்தி அவளது கிராமத்திலேயே புதைக்கப்பட்டாள் மம்பி!
இரண்டு நாள் கழித்து மிர்துள் மம்பி-யின் கையெழுத்தில் ஒரு சீட்டை கண்டான். அதில் அவள்,
"நான் இறந்துவிட்டால், என் உறுப்புகளை தந்தைக்கும் சகோதரனுக்கும் கொடுங்கள்! " என்று பிழையுடன் எழுதியிருந்தாள் மம்பி.
----XXXX----
மென்மையான, எளிமையான வரிகளில் ஆழமான, அழகான கதை.
ReplyDeleteதெளிவான மிகவும் தேவையான சிந்தனை...
ReplyDeleteMore than a story, its a real thought!