பயணம்
பிறப்பிலேயே கோடீஸ்வரனான நான், இந்த உலகின் நிம்மதியான மனிதனைத் கண்டுபிடுக்க ஏறத்தால என் பாதி சொத்தை ஆரூடம், டெல்ஃபை போன்ற பல சமாச்சாரங்களில் இழந்துவிட்டேன்.
வறுத்தமில்லை!
அந்த மனிதன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்ததே மகிழ்ச்சி! அவரைக் கண்டு, அவர் நிம்மதியின் இரகசியத்தை தெரிந்துகொண்டால் போதும்.
அவர் பெயர் நிவேரோ மிகோசி.
பல தேசங்கள் தாண்டி, பல கண்டங்கள் தாண்டி, இந்த உலகின் மறுமூலையிலுள்ள அவர் ஊரையும் நெருங்கிவிட்டேன்.
எத்தனை அழகான தீவு. மனிதனின் இயந்திர மூளை தீண்டாத பூமியின் ஒரே பாகம் இதுதானோ!
அந்த ஊர்வாசிகளிடம் நிவேரோவின் இருப்பிடம் பற்றி விசாரித்தேன். அந்த மக்களுக்கு அவர் இரகசியம் தெரிந்ததாக தெரியவில்லை. எனக்கு வழி மட்டும் சொன்னார்கள்.
அந்த இடம் மேலும் அழகாக இருந்தது. இரண்டு மலைகளுக்கு நடுவில் ஒரு பெரிய ஏரி. எங்கு பார்த்தாலும் பச்சை. நிம்மதியான மனிதன் மட்டும் அல்ல, கடவுளே இங்கு வாழலாம். அத்தனை அமைதி. அழகான அமைதி.
அந்த ஏரியின் மத்தியில் ஒரு வயதான மனிதர், தனியாக ஒரு சிறு படகிலிருந்து மீன்பிடித்துக்கொண்டிருந்தார். அந்த ரம்மியமான காட்சியில் மூழ்கிய வேளையில் அவர் என்னை நெருங்கிவருவதை மறந்துவிட்டேன்.
அவர் அருகில் வந்ததும், அவர் நறுமணம் என்னை நினைவுக்கு இழுத்தது.
அவரிடம், “"நீங்கள் தான் நிவேரோ மிகோசியா?”"
கையில் சில மீன் வைத்து இருந்தவர், புன்னகையை மட்டும் பதிலாக தந்தார்.
அவர் முகத்தில் அத்தனை அமைதி! 'அந்த புன்னகைக்கு எத்தனை வயது' என்று சரியாக கூறமுடியவில்லை. “
"ஐயா, நான் உங்களைப் பார்க்க வெகுதொலைவிலிருந்து வருகிறேன். நீங்கள் தான் இந்த உலகின் நிம்மதியான மனிதர் என்பதை நான் அறிவேன். அதன் இரகசியத்தை தயவுசெய்து எனக்கு கூறுமாறு வேண்டிக்கொள்கிறேன்”."
நிவேரோ, “"மன்னிக்கவும்! இன்னும் ஐந்து நிமிடத்திற்குள் இந்த மீன்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லையென்றால் என் மனைவி திட்டுவாள். நான் வருகிறேன்”"
----x----
இயல்பான அழகான கதை, ஆனால் பயணத்திற்கு காரணமான தேடல் மட்டும் எப்பொழுதும் நமக்குள் அல்லது நம்முடன் தான் இருக்கும் என்கிறது...!
ReplyDelete"எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
ReplyDeleteஅங்கே எனக்கோர் இடம் வேன்டும்
எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்...."
இப்படி இருக்க.,
மனைவியுடன் சேர்ந்து எப்படி நிம்மதி???