கோடை சாரல்கள்
பருவக்
காதலுக்கு
ஒய்வு
-கோடை விடுமுறை.
வாடிப் போய்விட்டன
சத்துணவின்றி.
அரசுப் பள்ளியின்
அண்டங் காக்கைகள்.
மாணவர்களின்
சப்தமின்றி
வேதனையில்
உதிர்ந்துவிட்டன
மைதானத்து மரங்கள்.
அம்மா செய்து தந்த
தேங்காய் மிட்டாய்,
ஆலமரத்து
கிழவியின்
சுவைக்கு ஈடில்லை.
உரிமம் இல்லா
ஓட்டுனர் ஆனேன்
-நுங்கு வண்டிக்கு.
மழலைகள் விளையாடும்
பள்ளியில் மன்னர்களும்,
அரசிகளும்,
மந்திரிகளும்,
விளையாடுகின்றனர் .
-சீட்டுக்கட்டில்.
நானும்
முதலாளி
-வேப்பங்கொட்டை
வியாபாரம்.
வருடத்தில் ஒருமுறை
மட்டுமே புத்தகப்
பூவின் மனம்.
புதிய காதலி
கிடைத்தால்
பழையவள்
வேறு பிரிவு
போய்விட்டாள்.
ஜூன் மாதம்
சுவற்றில் எதிரொலித்து,
காதில் இனிக்கும்
மழலைகளின் ரீங்காரம்.
காகங்களின் மதிய நேரத்து கீதம்,
மாணவர்களின் தோழனான
தெரு நாயின் ஏக்கம்...
கிழவியின் அதட்டல் வியாபாரம்,
உடற்கல்வி ஆசிரியரின்
விசில் சப்தம் என ஏதுமின்றி
நிசப்தமான சுடுகாடு தான்
கோடையின் சாரலில்
பள்ளிக்கூடங்கள்......
-ரஞ்சித் குமார்.கி
புதிய காதலி
ReplyDeleteகிடைத்தால்
பழையவள்
வேறு பிரிவு
போய்விட்டாள்.
Nice Lines...
A simple and plain but realistic elaboration...
ReplyDeleteMonologue describing vacation makes us also involved apart from that particular boy's mind visualization...