Saturday, February 5, 2011

சுயசரிதை !

சுயசரிதை !

தினம் ஒரு பாட்டு
தினம் ஒரு மெட்டு
தலையசைத்தேன் !



தினம் ஒரு மேடை
தினம் ஒரு வேடம்
கதை படித்தேன் !



தினம் ஒரு தோட்டம்
தினம் ஒரு ரோஜா
சரம் தொடுத்தேன் !



தினம் ஒரு கோப்பை
தினம் ஒரு பானம்
இதழ் விரித்தேன் !


தினம் ஒரு படுக்கை
தினம் ஒரு பதுமை
இடம் கொடுத்தேன் !


தினம் ஒரு படகு
தினம் ஒரு பயணம்
திசை மறந்தேன் !


இறுதியில்

ளமை இழந்தேன்
இச்சைகள் துறந்தேன்
ஞானி ஆனேன் !



நாடு கண்டேன்
நடந்ததைச் சொன்னேன்
கடவுள் ஆனேன் !

2 comments:

  1. A deep thought provoking criticism on both the faces of life...To enjoy bcoz of the BEST or to endure bcoz of the WORST is the practical TEST given to each one of us, where choosing between this forms the REST...

    ReplyDelete
  2. simple and simply the best... :)

    Missing "Like" button here to like the comment posted above :(

    ReplyDelete