Monday, December 20, 2010

கலிலீயோவின் கவலை!

கலிலீயோவின் கவலை!

ல்லை! இல்லை!
எதுவும் உண்மை இல்லை!

சூரியனும் மையம் இல்லை.
பூமிகூட அதனை சுற்றவில்லை.

அறிவியல் என்று எதுவும் இல்லை.
அவனின்றி ஓர் அணுவும் இல்லை.

விண்ணும் மண்ணும் சொந்தம் இல்லை.
விவிலியம் தவிர வேறு உண்மை இல்லை.

புதிய அறிவில் புண்ணியம் இல்லை.
'போப்' அறியாதது ஒன்றும் இல்லை.

'சாம்' சொன்னதில் குற்றம் இல்லை.
சத்தியமாக உலகம் சுழலவில்லை.

(இறுதியில்)

மண்டியிட்டால் தண்டனை இல்லை.
மன்னிப்பு கேட்டதால் மரணமும் இல்லை.

இல்லை! இல்லை!
எதுவும் உண்மை இல்லை!

மனிதனுக்கும் ஆறாம் அறிவு
அவசியம் இல்லை!


குறிப்பு:  1633 AD.
கலிலீயோவின் ' உலகம் நிலையானது அல்ல. சூரியன் உலகத்தை சுற்றவில்லை. உலகம்தான் சூரியனை சுற்றுகிறது.' என்ற கருத்துகள் விவிலியத்தில் 'சாம்' (Psalm) சொன்ன கூற்றிற்கு மாறான கருத்து என்றும், ஈபுரூவின் விவிளியமான 'எக்லேசியெடஸ்'ற்கும் (Ecclesiastes) மாறான கருத்து என்றும், அது கிருஸ்துவ மதத்தை அவமதிக்கும் செயல் என்றும் வாடிகன் கருதி  கலிலீயோவை வாடிகன் தேவாலயத்தில் மண்டியிட்டு, தான் கூறியது அனைத்தும் சான்றுகள் அற்றவை என்றும், உண்மைக்கு மாறானவை என்றும் கூறி மன்னிப்பு கேட்க்கச் செய்தது.

 

Psalm 104:5 - 'He set the earth on its foundations;
   it can never be moved.'





1 comment:

  1. Importance of sixth sense in analysing with the real time event requires a good knowledge of actual insight... An attempt of excellence...

    ReplyDelete